அமெரிக்காவுக்கு எதிராக இந்தியா அதிரடி- டெல்லி தூதரகம் முன்பிருந்த பாதுகாப்பு தடுப்புகள் அகற்றம்
டெல்லி: அமெரிக்காவில் இந்திய பெண் துணைத் தூதர் தேவ்யானி கோப்ரகடே மீதான அவமரியாதை கைது நாட்டு மக்களிடயே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளதைத் தொடர்ந்து இந்தியா அதிரடி நடவடிக்கைகளில் குதித்துள்ளது.
அமெரிக்காவுக்கு எதிரான சில கடுமையான நடவடிக்கைகளுக்கு அது உத்தரவிட்டுள்ளது. அதில் முக்கியமானது, டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு போடப்பட்டுள்ள பாதுகாப்பு தடுப்புகளை அகற்றுமாறு போடப்பட்ட உத்தரவு.
அந்த உத்தரவின்படி இன்று மாலையில் டெல்லி போலீஸார் நடவடிக்கையில் குதித்தனர். தூதரகம் முன்பு போடப்பட்டிருந்த சாலைத் தடுப்புகளை போலீஸார் அகற்றினர்.

அமெரிக்கர்கள் எப்போது்மே பாதுகாப்பு நடவடிக்கைகளில் மிகவும் உஷாராக, கவனமாக இருப்பார்கள் என்பதால் அதில் கை வைத்துள்ளது இந்தியா. இது அமெரிக்காவை நிச்சயம் தட்டி எழுப்பும் என்று இந்தியா கருதுகிறது.
டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு பாதுகாப்புக்காக ஏராளமான தடுப்புகள் போடப்பட்டுள்ளன. இந்த தடுப்புகள்தான் இன்று அகற்றப்பட்டன.

தூதரகங்களுக்கான மது, உணவுக்கு தடை
அதேபோல அமெரிக்க தூதரகம், இந்தியாவில் உள்ள பிற துணைத் தூதரகங்களுக்கு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மது வகைகள், உணவுப் பொருட்களுக்கான அனுமதியையும் நிறுத்த இந்தியா உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க பள்ளி ஆசிரியர்களின் விசா விவரத்தை சேகரிக்க உத்தரவு
அதேபோல இந்தியா முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் உள்ள அமெரிக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் விசா, சம்பளம் உள்ளிட்ட விவரங்களை இந்தியாவிடம் சமர்ப்பிக்கவும் மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications