வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் ரீ என்ட்ரி.. வாலிபரின் உடலை துளைத்த குண்டு.. பிஎஸ்எஃப் அதிரடி
கொல்கத்தா: மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் வங்கதேசத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்து மத நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன்பிறகு அவர் அங்கிருந்து மீண்டும் நம் நாட்டுக்குள் நுழைய முயன்றதோடு, நம் நாட்டின் எல்லை பாதுகாப்பு படை வீரரிடம் மோதலில் ஈடுபட்டு துப்பாக்கியை பிடுங்க முயன்றார். இதனால் எல்லை பாதுகாப்பு படையினர் அவரை துப்பாக்கியால் சுட்டனர்.
இந்தியா - வங்கதேசம் இடையே பிரச்சனை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இருநாடுகளின் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இந்தியா - வங்கதேசம் இடையே மொத்தம் 4,096 கிலோமீட்டர் தூரத்துக்கு எல்லைப்பகுதி உள்ளது.

தற்போது இருநாடுகள் இடையே சுமூக உறவு என்பது இல்லை. இதனால் இரவு பகலாக நம் நாட்டின் எல்லை பாதுகாப்பு படையினர் எல்லையில் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் நாட்டின் பாதுகாப்பு கருதி எல்லையில் கம்பி வேலி அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. மொத்தம் 79 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. இன்னும் 21 சதவீத பணிகள் தான் பாக்கி உள்ளது. அதாவது இருநாடுகளின் எல்லை 4,096 கிலோமீட்டர் தொலைவாக உள்ள நிலையில் இன்னும் 864 கிலோமீட்டருக்கு மட்டுமே எல்லையில் வேலி அமைக்கப்பட வேண்டி உள்ளது.
இந்நிலையில் வங்கதேசம் - இந்தியா எல்லையில் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. நம் நாட்டு எல்லை பாதுகாப்பு படை வீரர்களிடம் அவர் மோதி துப்பாக்கியை பறிக்க முயன்றதால் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதாவது
மேற்கு வங்க மாநிலம் புட்டியா கிராமத்தை சேர்ந்தவர் அக்தர் ஜமால் ரோனி. இவர் பெண் ஒருவருடன் சேர்ந்து இந்தியாவில் இருந்து வங்கதேசத்துக்குள் கடந்த 3ம் தேதி சட்டவிரோதமாக நுழைந்துள்ளார்.
வங்கதேசத்தில் மத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு மீண்டும் நம் நாட்டுக்கு திரும்பினார். வங்கதேசத்தில் இருந்து அவர் எல்லையை நோக்கி வந்தார். அப்போது எல்லை பாதுகாப்பு படை வீரர் அவரை தடுத்து நிறுத்தி அங்கிருந்து செல்லும்படி கூறியுள்ளார். ஆனால் அந்த நபர் வாக்குவாதம் செய்து துப்பாக்கியை பறிக்க முயன்றுள்ளார். இதனால் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதுபற்றி எல்லை பாதுகாப்பு படையின் திரிபுரா ஃப்ராண்டையர் சார்பில், ‛‛அக்தர் ஜமால் ரோனி, பெண் ஒருவருடன் நம் நாட்டுக்குள் நுழைய முயன்றார். வங்கதேசத்தில் இருந்து வந்த அவர்கள் வங்கதேசம் - நம் நாட்டுக்கு இடையே உள்ள வேலியின் அருகே வந்தனர். எல்லை பாதுகாப்பு படையினர் சிலமுறை எச்சரிக்கை செய்தனர். ஆனால் அவர்கள் எல்லை பாதுகாப்பு படையினருடன் சண்டை செய்துள்ளனர். அதேபோல் எல்லையில் உள்ள வேலியை சேதப்படுத்த முயன்றனர். அதோடு வீரர் வைத்திருந்த துப்பாக்கியை பறிக்க முயன்றனர்.
இதனால் பாதுகாப்பு கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் அந்த நபர் மட்டும் காயமடைந்துள்ளார். அந்த பெண் அருகே உள்ள கிராமத்துக்கு ஓடிவிட்டார். அதன்பிறகு அந்த நபர் அகர்தலாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது'' என்று கூறப்பட்டுள்ளது. அதாவது இந்திய - வங்கதேச எல்லையில் தற்போது பதற்றமான சூழல் உள்ளது. எல்லை வழியாக வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக சிலர் நுழைய முயற்சித்து வருகின்றனர். இதனால் அக்தர் ஜமால் ரோனியில் வங்கதேசத்தில் இருந்து நம் நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைகிறார் என்று நினைத்து எல்லை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தியபோது துப்பாக்கியை பறிக்க நினைத்ததால் குண்டு காயமடைந்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications