குரங்குகளோடு வாழும் 'மங்கி மேன்'.. உ.பியை கலக்கும் தாடி வைத்த தாத்தா!
உத்தர பிரதேச மாநிலம் ரே பரேலியில் குரங்குகளுடன் வாழும் மனிதர் ஒருவர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார்.
Recommended Video

ரே பரேலி: உத்தர பிரதேச மாநிலம் ரே பரேலியில் குரங்குகளுடன் வாழும் மனிதர் ஒருவர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார். இவர் தினமும் 100 க்கும் அதிகமான குரங்குகளுடன் கொண்டாட்டமாக வாழ்ந்து வருகிறார்.
குரங்குகளின் உணவுத் தேவைக்காகவே இவர் தினமும் நிறைய செலவு செய்கிறார். கிருஷ்ண குமார் மிஸ்ரா என்ற இவர் தற்போது இந்தியா முழுக்க வைரல் ஆகியுள்ளார்.
வைரல் தாத்தாவான இவர் தனக்கு மனிதர்களை விட விலங்குகளையும், குரங்குகளையும்தான் ரொம்ப பிடிக்கும் என்று கூறியுள்ளார். இவர் பற்றி யூ- டியூபில் வெளியாகி இருக்கும் வீடியோக்களை பார்க்கவே தனி கூட்டம் காத்து இருக்கிறது.

தி மங்கி மேன்
உத்தர பிரதேச மாநிலம் ரே பரேலியில் வசித்து வருகிறார் கிருஷ்ண குமார் மிஸ்ரா. 79 நிரம்பிய இந்த நபர்தான் இப்போது அந்த மாநிலத்தின் சூப்பர் ஹீரோ. இவருக்கு மக்கள் வைத்து இருக்கும் செல்லப் பெயர் 'தி மங்கி மேன்'. தினமும் இவரைச் சுற்றி 100க்கும் அதிகமான குரங்குகள் வாழ்ந்து வருகிறது. இவர் வருவதை பார்த்தாலே குரங்குகள் வேகமாக இவரை நோக்கி வந்து விடுகின்றன. பல நாட்கள் இவர் குரங்குகளுடனே படுத்து தூங்கியும் இருக்கிறார்.

10 வருடமாக தொடர்ந்து வரும் பாசம்
இவர் குரங்குகளுக்கு உணவு ஊட்டும் பழக்கம் கடந்த பத்து வருடமாக இருந்து வருகிறது. தினமும் நிறைய பாக்கெட் பிரெட்டுகளை இவர் குரங்குகளுக்காக வாங்கி வருகிறார். இவர் பிரெட்டுகளுடன் வருவதை பார்த்தவுடன் குரங்குகள் நேரடியாக இவரிடம் ஓடி வந்துவிடுகிறது. மேலும் எல்லா குரங்குகளும் இவர் சொன்ன சொல்லை தட்டாமல் அப்படியே கேட்கிறது. புதிதாக சந்திக்கும் குரங்குகளையும் எளிதாக பேசி தன் வசம் இழுத்து விடுகிறார் இந்த தாத்தா.

உலகம் முழுக்க வைரல்
இந்த நிலையில் இவரின் வித்தியாசமான செயல்பாடு காரணமாக இவர் உலகம் முழுக்க வைரல் ஆகி இருக்கிறார். குரங்குகளுக்கு உணவு வாங்கு கொடுப்பதற்காக வெளிநாட்டில் இருந்து இவருக்கு பலரும் பணம் அனுப்புகிறார்கள். மேலும் இவருக்கு இந்தியாவில் இருந்தும் பலர் உதவி தொகை அனுப்பி வருகின்றனர். ஆனாலும் சமயங்களில் இவரிடம் பணம் இல்லாமல் குரங்குகளுக்கு உணவு வாங்கித் தர முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டு இருக்கிறது.

கிருஷ்ண குமார் வீட்டில் சண்டை
இவரின் இந்த பழக்கம் காரணமாக இவரது வீட்டில் அடிக்கடி சண்டை வருவதாகவும் கூறப்படுகிறது. இவரது மனைவி தினமும் இவருக்கும், குரங்கிற்கும் இருக்கும் பழக்கத்தை வைத்து சண்டையிட்டு வருகிறார். மேலும் ஊரில் உள்ள மக்களில் சில இவரை மிகவும் ஏளனமாக கிண்டல் செய்தும் வருகின்றனர். ஆனாலும் இவருக்கு இவரது குழந்தைகள் மிகவும் உறுதுணையாக இருக்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications