நவம்பர் 11 முதல் தமிழகத்தில் வருண திசை... 5 நாட்களுக்கு கனமழை.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சென்னையில் கனமழை வெளுக்குமாம்...வானிலை மையம்! வார்னிங்- வீடியோ

  டெல்லி : நவம்பர் 11 முதல் 15 வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை முதல் மிககனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த வாரத்தில் தொடர்ந்து அடித்து துவைத்த பேய்மழையின் போது இந்திய வானிலை மையம் தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுத்தது.

  அதே போல இன்று முதல் நவம்பர் 15 வரை பேய்மழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மீண்டும் ஒரு மழைக்காலத்தை தமிழகம் சந்திக்கத் தயாராகி வருகிறது.

   அதிகாரப்பூர்வ தகவல்

  அதிகாரப்பூர்வ தகவல்

  இந்திய வானிலை மையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள அகில இந்திய வானிலை முன் எச்சரிக்கையில் நவம்பர் 11ம் தேதி தமிழகத்தின் கடலோர பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. இதே போன்று நாளையும் ஆந்திராவின் தெற்கு கடலோரப் பகுதி மற்றும் தமிழகத்தின் கடலோரப் பகுதிகள், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் கனமழை முதல் மிககனமழை பெய்யும் என்று குறிப்பிட்டுள்ளது.

   கன மழை - மிக கன மழை

  கன மழை - மிக கன மழை

  நவம்பர் 13ம் தேதியும் தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிககனமழை பெய்யக்கூடும். இதே போன்று தெற்கு ஆந்திராவை ஒட்டியுள்ள கடற்கரைப் பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

   குறிப்பிட்ட இடங்களில்

  குறிப்பிட்ட இடங்களில்

  வருகிற செவ்வாய்க்கிழமையன்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் குறிப்பிட்ட இடங்களில் கனமழை பெய்யும் என்றும், தெற்கு ஆந்திராவை ஒட்டியுள்ள கடல்பகுதி, கர்நாடகாவின் தெற்கு உட்புற பகுதிகள் ராயலசீமா மற்றும் கேரளாவில் குறிப்பிட்ட பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

   15ம் தேதி கன மழை - மிக கன மழை

  15ம் தேதி கன மழை - மிக கன மழை

  நவம்பர் 15ம் தேதியன்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதே போன்று கர்நாடகா மற்றும் கேரளாவின் உள் மாவட்டங்களில் பனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை மையம் முன் எச்சரிக்கை விடுத்துள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Indian Metrology predicts that from November 11 to 15 Coastal Tamilnadu and Puducherry may get heavy rain to very heavy rain over isolated places.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற