அமெரிக்காவில் இந்தியர் தாக்குதலுக்குள்ளான சம்பவத்தில் உரிய நடவடிக்கை: வெளியுறவுத் துறை
டெல்லி: அமெரிக்காவில் முதிய வயதுள்ள இந்தியர் ஒருவர் கொலைவெறி தாக்குதலுக்கு ஆளான சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையது அக்பரூதின் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான குஜராத்தைச் சேர்ந்த சுரேஷ்பாய் பட்டேல் என்பவர் கடந்த 6ம் தேதி நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, பக்கத்து வீட்டுக்காரர் புகாரை தொடர்ந்து, நியூயார்க் போலீசார் அவரை தாக்கியுள்ளனர். போலீசார் கடுமையாக தாக்கியதில் சுரேஷ்பாய் பட்டேல் சுயநினைவை இழந்தார். அவருக்கு முடக்குவாதமும் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சையது அக்பரூதின் கூறியதாவது: இந்த விவகாரத்தில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அட்லாண்டா மாகாணத்தில் உள்ள நமது தூதரக அதிகாரிகள், சம்பவம் நடந்த மேடிசன் நகர நிர்வாகத்தையும், பாதிக்கப்பட்ட சுரேஷ் பட்டேலின் குடும்பத்தினரையும் தொடர்பு கொண்டுள்ளனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மேடிசன் நகர காவல்துறைத் தலைவர் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு மிகவும் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இவ்வாறு கூறினார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications