"வீட்டை விட்டு வெளியே வராதீங்க".. வங்கதேச வன்முறையால் இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை ‛வார்னிங்’
டாக்கா: வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளதில் 32 பேர் வரை பலியாகி உள்ளனர். இந்நிலையில் தான் வங்கதேசத்தில் வசிக்கும் இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை சார்பில் தூதரகம் வாரியாக வார்னிங்குடன் கூடிய முக்கிய அட்வைஸ் வழங்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சியை சேர்ந்த ஷேக் ஹசீனா பிரதமராக உள்ளார். இவரது கட்சி தான் கடந்த 2009 முதல் தொடர்ந்து அரியணை ஏறி வருகிறது. இந்நிலையில் தான் தற்போது வங்கதேசத்தில் கடும் வன்முறை வெடித்துள்ளது. வங்கதேச தலைநகர் டாக்காவில் அமைதியாக நடந்து வந்த போராட்டம் தான் வன்முறையாக மாறி உள்ளது.

அதாவது வங்கதேசத்தை பொறுத்தவரை அரசு பணிகளில் முன்னாள் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த இடஒதுக்கீடு மூலம் சுதந்திர போராட்ட வீரர்களின் பேரக்குழந்தைகளுக்கும் அரசு பணி வழங்கப்பட்டு வருகிறது. இந்த இடஒதுக்கீட்டுக்கு கடும் எதிர்ப்பு உள்ளது. இந்நிலையில் தான் 2018 ல் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு என்பது ரத்து செய்யப்பட்டது.
இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை கடந்த ஜுன் 5ம் தேதி விசாரித்த அந்நாட்டின் உயர்நீதிமன்றம் மீண்டும் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். அவர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை ரத்து செய்ய முடியாது என உத்தரவிடப்பட்டது.
சர்வதேச சதி! வங்கதேசத்தில் இருந்து புதிய கிறிஸ்துவ நாட்டை உருவாக்க முயற்சி- பிரதமர் ஷேக் ஹசீனா பகீர்
இந்த உத்தரவை தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று அரசு ஒளிபரப்பு நிலையத்துக்குள் நுழைந்தவர்கள் தீவைத்தனர். இதனால் நிலைமை மோசமானது. மேலும் ஆளும் கட்சியின் மாணவர் பிரிவுக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 32 பேர் பலியாகி உள்ளனர். 2,500க்கும் அதிகமானவர்கள் காயடைந்துள்னர். இதனால் தற்போது வங்கதேசத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில் தான் வங்கதேசத்தில் உள்ள இந்தியர்களுக்கு டாக்காவில் உள்ள நம் நாட்டின் தூதரகம் வார்னிங்குடன் கூடிய முக்கிய அட்வைஸ் வழங்கி உள்ளது. இதுதொடர்பாக இந்திய தூதரம், ‛‛வங்கதேசத்தில் தற்போது நடக்கும் போராட்ட சூழலுக்கு நடுவே இந்தியர்கள் வெளியே செல்ல வேண்டாம். இந்திய மாணவர்கள் உள்பட அனைவரும் வெளியே பயணிப்பதை தவிர்க்க வேண்டும். தங்கியிருக்கும் இடங்களிலேயே இருக்க வேண்டும்.

ஏதேனும் உதவி வேண்டும் என்றால் 24 மணிநேர அவசர உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம். அதன்படி டாக்காவில் உள்ள தூதரக அலுவலகத்தை +880-1937400591 என்ற எண்ணிலும், சிட்டகாங்கில் உள்ள உதவி தூதர அதிகாரியின் அலுவலகத்தை +880-1814654797, +880-1814654799 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது வங்கதேசத்தில் வன்முறை உச்சக்கட்டத்தை அடைந்து உள்ளதால் இந்தியர்களும் அங்கு செல்லாமல் இருப்பது நல்லது என வெளியுறவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications