'பான் பராக்'காரர்களுக்கு சாதகமான பார்லிமென்டரி குழு அறிக்கை.. 'ஷாக்'கில் புகையிலை எதிர்ப்பாளர்கள்!
டெல்லி: புகையிலையை பயன்படுத்தினால் புற்றுநோய் வரும் என்று இந்தியாவில் இதுவரை நடந்த எந்த ஆய்விலும் நிரூபிக்கப்படவில்லை என்று நாடாளுமன்றக் குழு ஒன்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
புகையிலை பொருட்களில் அபாய எச்சரிக்கையை 40 சதவிகிதத்தில் இருந்து 85 சதவிகிதமாக அதிகரிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
இதற்காக மகாராஷ்டிராவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் திலீப்காந்தி தலைமையில் நாடாளுமன்ற குழு அமைக்கப்பட்டு அறிக்கை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

நிரூபணமில்லை...
இந்தக் குழு தங்களது அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், புகையிலை பொருட்களின் பயன்பாடு புற்றுநோயை ஏற்படுத்தும் என்று இந்தியாவில் நடத்தப்பட்ட எந்தவித ஆய்வுகளிலும் நிரூபிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஆய்வுகள்...
வெளிநாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையிலேயே இதுவரை புகையிலைக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முடிவுகள் மாறுபடும்...
இந்தியாவில் பிரத்யேக ஆய்வு நடத்தினால் முடிவுகள் வேறாக இருக்கக் கூடும் என்று அந்தக் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை அனைவரையும் அதிர வைத்துள்ளது.

வருத்தம்...
இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலே கூறுகையில், நாடாளுமன்ற குழுவின் அறிக்கை மிகவும் வருத்தம் அளிக்கிறது. புகையிலையை பயன்படுத்தினால் புற்றுநோய் வரும் என்று நாட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் அனைவருக்குமே தெரியும்.

ஆதாரங்கள் தருகிறோம்...
மத்திய குழு இதனை ஏன் மறுக்கிறது என்பது தெரியவில்லை. இதற்கு ஆதாரங்கள் வேண்டும் என அவர்கள் விரும்பினால் அதனை தர நாங்களும் தயார் என்றார் சுலே.

சட்டம்...
கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் புகையிலை பொருட்கள் பாக்கெட்டுகளில் உடல் நலம் பாதிப்பு தொடர்பான விளம்பரம் இடம் பெற வேண்டும். மேலும் சிறிய எழுத்துக்களில் இருப்பது போதாது என்றும், இது இந்த விளம்பரத்தில் 85 சதவீதம் இடம் பெற வேண்டும் என்றும் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

கால அவகாசம் ?
இதற்கான காலக்கெடு ஏப்ரல் 1ம் தேதியுடன் காலவதியாகிறது. ஆனால் சிகரெட் மற்றும் புகையிலை நிறுவனங்கள் இதற்கு உடன்பட்டதாக தெரியவில்லை. மத்திய அரசும் எவ்வித முடிவும் எடுக்கவில்லை. மத்திய அரசு இன்னும் கால அவகாசம் அளிக்கும் என்று கூறப்படுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications