ஆப்பிரிக்க சிறையில் இருந்து இந்திய கப்பல் கேப்டன் சுனில் விடுதலை: குடும்பத்தார் மகிழ்ச்சி
டெல்லி: ஆப்பிரிக்க நாட்டு சிறையில் 6 மாதங்களாக இருந்த இந்திய கப்பல் கேப்டன் சுனில் ஜேம்ஸ் விடுதலை செய்யப்பட்டார்.
இந்திய கப்பலான எம்.வி. ஓஷன் சென்ச்சுரியனின் கேப்டனாக இருப்பவர் மும்பையைச் சேர்ந்த சுனில் ஜேம்ஸ் (38). அவரது மனைவி அதிதி. சுனில் கடந்த ஜூலை மாதம் 16ம் தேதி நைஜீரியா அருகே உள்ள லாகோஸில் கப்பலில் சென்று கொண்டிருக்கையில் அதை கடற்கொள்ளையர்கள் தாக்கினர்.
இதையடுத்து ஜூலை 30ம் தேதி இந்த சம்பவம் குறித்த விசாரணைக்காக மேற்கு ஆப்பிரிக்காவின் டோகோ நாட்டின் தலைநகர் லோமில் கப்பலை நிறுத்திவிட்டு வந்த சுனில் அந்நாட்டு கடலோரக் காவல்படையால் கைது செய்யப்பட்டார். கடற்கொள்ளையர்களுக்கு உதவியதாக சுனில் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவருடன் விஜயன் என்ற மாலுமியும் கைது செய்யப்பட்டார்.

மன்மோகன் சிங்
குற்றம் செய்யாத சுனில் ஜேம்ஸை டோகோ நாட்டு சிறையில் இருந்து மீட்குமாறு அவரது குடும்பத்தார் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

குழந்தை இறப்பு
சுனில் சிறையில் வாடுவதை நினைத்து வருந்திய அதிதிக்கு மேலும் ஒரு சோகம் ஏற்பட்டது. அவர்களின் ஒரே பிள்ளையான 11 மாத ஆண் குழந்தை உடல் நலக்குறைவால் கடந்த 2ம் தேதி மரணம் அடைந்தது.

பிண அறை
தனது பிள்ளைக்கு இறுதிச் சடங்குகளை செய்ய தனது கணவர் நிச்சயம் வருவார் என்ற நம்பிக்கையில் அதிதி குழந்தையின் உடலை மருத்துவமனையில் உள்ள பிண அறையில் பாதுகாத்து வைத்தார்.

சுனில் விடுதலை
6 மாதங்களாக சிறையில் வாடிய கேப்டன் சுனில் மற்றும் விஜயன் என்ற மாலுமி மத்திய அரசின் தலையீட்டால் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் இன்று டோகோவில் இருந்து இந்தியாவுக்கு கிளம்புகிறார்கள்.

பிரதமருக்கு நன்றி
சுனிலை சிறையில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுத்த பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அவரது குடும்பத்தார் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications