For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புவியீர்ப்பு விசையை நியூட்டன் கண்டுபிடிக்கும் முன்பே வேதங்களில் கூறப்பட்டுள்ளது: மாஜி இஸ்ரோ தலைவர்

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூர்: நிலவில் நீர் இருப்பது வேதங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், ஆர்யபட்டர் போன்ற நிபுணர்களுக்கு புவியீர்ப்பு விசை இருப்பது ஐசக் நியூட்டனுக்கு முன்பே தெரியும் என நாட்டின் முன்னணி விஞ்ஞானிகளில் ஒருவரும், முன்னாள் இஸ்ரோ தலைவருமான மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சர்வதேச மாநாடு ஒன்று பேசுகையில் கூறியதாவது,

வேதங்களில் உள்ள ஸ்லோகங்களில் நிலவில் நீர் இருப்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை யாரும் நம்பமாட்டார்கள். எங்களின் சந்திராயன் மிஷன் மூலம் அதை நீரூபித்துள்ளோம். வானியல் சாஸ்திர நிபுணரும், கணிதமேதையுமான ஆர்யபட்டர் மற்றும் பாஸ்கரா ஆகியோர் கோள்கள் பற்றி ஆராய்ச்சி செய்துள்ளனர். சந்திராயனுக்கு ஆர்யபட்டாவின் ஆய்வு பயன்படுத்தப்பட்டது.

Indian Scriptures Mention Gravity 1500 Years Before Isaac Newton: Former ISRO Chief G Madhavan Nair

எங்கள் வேதங்களில் புவியீர்ப்பு விசை பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புவியீர்ப்பு விசையை ஐசக் நியூட்டன் கண்டுபிடிப்பதற்கு 1,500 ஆண்டுகளுக்கு முன்பே அது குறித்து வேதங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரப்பா நாகரீகத்தின்போது கணிதத்தில் வடிவியலை பயன்படுத்தியுள்ளனர். மேலும் வேதிக் காலத்திலேயே பிதாகரஸ் தேற்றம் இருந்துள்ளது. விண்வெளி மற்றும் அணு சக்தி பற்றி வேதங்களில் நிறைய தகவல்கள் உள்ளது. கிமு 600 வரை நாங்கள் நன்றாக இருந்தோம். அதன் பிறகு தான் படையெடுப்புகள் துவங்கின. நாங்கள் அணுக்களை அமைதிக்காக பயன்படுத்தினோம். வேதங்களை படிக்க சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்றார்.

English summary
One of the country's leading scientists and former ISRO chairman, G Madhavan Nair, today propounded the theory that some shlokas in the Vedas mention the presence of water on the moon, and that astronomy experts like Aryabhatta knew about gravitational force much before Issac Newton.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X