ஆதார் கார்டு, ரேஷன் கார்டு போதுமே.. இந்தியாவின் முதல் "அரிசி ஏடிஎம்" மிஷின்.. சர்னு கொட்டுது பாருங்க
புவனேஸ்வர்: விவசாயிகளின் நன்மை கருதி, மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது,.. இது ரேஷன் அட்டைதாரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
இந்திய விவசாயிகளின் நலனிலும், அவர்களின் நல்வாழ்விலும் மத்திய அரசு தொடர்ந்து அக்கறை காட்டி வருகிறது.. அந்தவகையில், விளைபொருட்களை மத்திய அரசு கொள்முதல் செய்து நுகர்வோருக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, "பாரத்' பிராண்ட் ஆட்டாவின் சில்லறை விற்பனை ஆரம்பமாகி உள்ளது. இதில் கோதுமை மாவு ஒரு கிலோவுக்கு ரூ. 27.50-க்கு மிகாமல் சில்லறை விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கிறது.
மத்திய அரசு: எனினும், நாடு முழுவதும் அரிசி விலை உயர்ந்தபடியே இருக்கிறது.. அதாவது கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 15 சதவீதம் அதிகரித்து விட்டதாம்.. அதனால்தான், அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்காக, மலிவு விலையில் அரிசி விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு 'பாரத் அரிசி' என்று பெயரிடப்பட்டது. கிலோ ரூ.29 என்று விலையும் நிர்ணயிக்கப்பட்டு, 5 கிலோ மற்றும் 10 கிலோ பாக்கெட்டுகளில் பாரத் அரிசி கிடைத்து வருகிறது.
முறையற்ற பருவமழை, குறைவான விளைச்சல், போன்ற காரணங்களினால், அவ்வப்போது அரிசி விலை தாறுமாறாக உயர்ந்து வரும்நிலையில், மத்திய அரசின் பாரத் அரிசி திட்டமானது, பேருதவியாக இருந்து வருகிறது.
முதல் ஏடிஎம்: இந்நிலையில், மத்திய அரசு அடுத்த அதிரடியை கையில் எடுத்துள்ளது.. அதன்படி, இந்தியாவிலேயே முதன்முறையாக புவனேஸ்வரில் முதல் அரிசி ஏடிஎம்-ஐ திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் கிருஷ்ண சந்திர பத்ரா, இந்த அரிசி ஏ.டி.எம் மையத்தை புவனேஸ்வரில் திறந்து வைத்திருக்கிறார்.
குறிக்கோள்: அப்போது அமைச்சர் பேசியபோது, "பயனாளிகளுக்கு, சரியான எடையில் அரிசி வழங்கப்படுவதை உறுதி செய்வதே இதன் குறிக்கோள். இது இந்தியாவின் முதல் அரிசி ஏடிஎம். பல்வேறு சோதனைகளுக்கு பிறகு திறக்கப்பட்டது. ஒடிசாவில் 30 மாவட்டங்களில் அரிசி ஏடிஎம்-ஐ விரிவுபடுத்த முடிவு செய்துள்ளோம்.
குடும்ப அட்டைத்தாரர்கள் அரிசி வழங்கும் ஏடிஎம் இயந்திரத்தில் தங்களது குடும்ப அட்டை அல்லது ஆதார் கார்டு எண்ணை பதிவிட்டு அவர்களுக்கான 25 கிலோ அரிசியை பெற்றுச் செல்லலாம். இனி நீண்ட நேரம் நியாய விலை கடைக்கு முன்பு வரிசையில் மக்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. இதன் மூலம் மத்திய அரசு வழங்கும் மானிய அரிசியின் திருட்டை கணிசமாக குறைக்க முடியும். இந்த முறை மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்படும்" என்றார்..
பெரும் வரவேற்பு: ரேஷன் கார்டை ஏடிஎம் கொண்டு சென்று 25 கிலோ அரிசியை பெற்றுக்கொள்ளும் இந்த வசதியானது, பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications