இந்தியாவின் கடைக்கோடி ரயில் நிலையம்! ஆனால் எந்த ரயிலும் நிற்காது! ஏன் தெரியுமா?
சிங்காபாத்: இந்தியாவின் கடைசி ரயில் நிலையம் எங்கே இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏறக்குறைய சில நூறு ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்த ரயில் நிலையத்தில் இப்போது ஒரு பயணிகள் ரயிலும் நிற்பதும் இல்லை. காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் பயணித்த இந்தப் பாதை இன்று அதன் அடையாளங்கள் மாறாமல் அப்படியே இருந்து வருகிறது.
சுருக்கமான வரலாறு: இந்திய விடுதலைக்கும் ரயில்வேக்கும் நெருக்கமான ஒரு உறவு உள்ளது. அதற்குள் 150 ஆண்டுகள் மேலான உணர்ச்சிகரமான இந்திய விடுதலைப்போராட்டக் கதைகள் புதைந்துபோய் கிடக்கின்றன. ஆம்! இந்தியாவுக்கு ரயில் பாதைகள் வந்த பிறகுதான் நாடு முழுவதும் பயணிக்கக் கூடிய ஒரு எளிமையான தொடர்பு உருவானது.

இந்தியாவை ஆள வந்த கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகம் செய்வதற்காகப் போட்ட இந்த இரும்பு பாதைகளில் பயணித்துத்தான் இந்திய விடுதலைக்கான மக்களை ஒன்று திரட்டினார் காந்தி.
தங்களின் நிர்வாக வசதிக்காக போடப்பட்ட ரயில் பாதை, எதிர்காலத்தில் தங்களை ஆட்சியதிகாரத்தில் இருந்தே வெளியேற்றுவதற்கு உடந்தையாக இருக்கப் போகிறது என்பதை அப்போது ஆங்கிலேயர்கள் உணர்ந்திருக்க மாட்டார்கள். இந்திய ரயில்வே என்பது நம் நாட்டின் வளர்ச்சியில் ஒரு மகத்தான அத்தியாயம்.
1837 ஆம் ஆண்டில் ரெட் ஹில் ரயில்வே கிரானைட் கற்களைக் கொண்டு செல்வதற்காக அன்றைய மெட்ராஸில் முதன்முதலாக தனது பயணத்தைத் தொடங்கியது. முதல் பயணிகள் ரயில் 1853 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி பம்பாயிலிருந்து தானேவிற்கு நீராவியின் மூலம் இயக்கப்பட்டது. இந்தத் தொடக்கத்தின் மூலம் இந்தியாவில் இரயில் போக்குவரத்தின் விடியல் ஆரம்பமானது. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, இந்திய ரயில்வே 1951 இல் தேசியமயமாக்கப்பட்டது, பல்வேறு மாநில அமைப்புகளை ஒருங்கிணைந்து அது நிறுவனமானது.
ஆரம்பக் காலத்தில் தனித்தனியாக இயங்கிவந்த 42 ரயில்வே நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. மொத்தம் ஆறு மண்டலங்களாக மறுசீரமைப்பு செய்யப்பட்ட பின்னர் அது 18 மண்டலங்களாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இன்று, இந்திய ரயில்வே உலகின் நான்காவது பெரிய பொதுத்துறை நிறுவனம். இது 68,000 கி.மீ.க்கும் மேல் நீளமான இரும்புப் பாதைகளைக் கொண்டுள்ளது. இதுவே நாட்டின் போக்குவரத்துத் துறையின் முதுகெலும்பாகத் திகழ்ந்து வருகிறது. தினமும் லட்சக்கணக்கான பயணிகளையும் சரக்குகளையும் இந்த ரயில்கள் ஏற்றிச் செல்கின்றன.
எல்லையில் ரயில் நிலையம்: இந்திய- வங்கதேசம் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சிங்காபாத் ரயில் நிலையம். மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தில் உள்ள ஹபீப்பூர் நகரத்தில் அமைந்துள்ள இந்தச் சிங்காபாத். . இங்கே ரயில் நிலையம் ஒன்று உள்ளது. ஆனால், எந்த ரயிலும் இங்கே நிற்காது. ஆகவே இது நாட்டிலேயே மிகமிகத் தனித்துவமான ரயில்நிலையம்.
ஒரு காலத்தில் பிரிட்டிசார் நாட்டை ஆண்ட போதும் போடப்பட்ட ரயில் பாதைகள் இந்தியாவிலிருந்து வங்கதேசம் பயணித்து வந்தனர். ஆகவே இதற்கு என்று நீண்ட வரலாறு உள்ளது. ஒரு காலத்தில் பரபரப்புக்குப் பஞ்சமே இல்லாமல் இயங்கி வந்த இந்த ரயில் நிலையம் இப்போது அமைதியில் ஆழ்ந்துள்ளது. அங்கே பயணிகள் என யாரும் வருவதில்லை. நிலத்தின் அடிப்படையிலும் மொழியின் அடிப்படையிலும் வங்கதேசம் இப்போது தனி நாடு. அன்று அப்படி இல்லை. ஆகவே, எல்லைப் புறத்தில் உள்ள இந்த ரயில் நிலையம் கொல்லைப்புறம்போல் காட்சியளித்து வருகிறது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்த சிங்காபாத் ரயில் நிலையம் ஸ்தாபிக்கப்பட்டது. அன்று இந்தப் பாதையில் சுபாஷ் சந்திரபோஸ், மகாத்மா காந்தி போன்ற முக்கிய தலைவர்கள் பயணித்துள்ளனர். அதற்கான சாட்சி இப்போது உள்ள தண்டவாளங்கள்தான். அப்போது இது கொல்கத்தாவிற்கும் டாக்காவிற்கும் இடையே ஒரு முக்கியமான பாதையாக இருந்தது. டாக்கா ஒரு செழிப்பான வர்த்தக நகரம். சுதந்திரத்திற்கு முன் மக்கள் பயணிக்கவும் வர்த்தகம் செய்வதற்கான பொருட்களைக் கொண்டு செல்லவும் இதுதான் எளிய வழிப்பாதை.
ரயில் நிலைய கட்டிடக்கலை: சிங்காபாத் ரயில் நிலையத்தின் கட்டிடக்கலை பழங்கால கட்டடக் கலைக்கு ஒரு சான்று. அது ஒரு ஆங்கிலேயர் காலத்து அடையாளம். இங்கே போடப்பட்டுள்ள ரயில் இரும்பு தண்டவாளங்கள்,. சிக்னல் லைட், டிக்கெட் கவுண்டர்கள் என அப்படியே பழமை மாறாமல் நிறங்கள் மங்கிப் போய் காட்சியளிக்கின்றன. அந்த ரயில் நிலையத்திற்கும் இன்றைய ரயில் நிலையத்திற்கும் மாபெரும் மாற்றங்கள் உள்ளன. ஏறக்குறைய இது ரயில் நிலையம் இல்லை ஒரு நினைவுச் சின்னம்.
நவீனக் காலத்தில் சிங்காபாத்: இந்தியச் சுதந்திரத்திற்குப் பிறகு, சிங்கபாத் ரயில் நிலையம் தனது வேகத்தைக் குறைத்துக் கொண்டுவிட்டது. 1971 இல் பங்களாதேஷ் என்ற புதிய நாடு உருவானது. அதனால் இந்தப் பகுதியில் அரசியல் அடையாளங்கள் மாறிவிட்டன. 1978 இல் போடப்பட்ட ஒப்பந்தம் மாற்றத்திற்கு முக்கிய காரணம். இந்த ஒப்பந்தம் சிங்கபாத்திலிருந்து சரக்கு ரயில்களை மட்டுமே இயக்க அனுமதித்தது.

2011 இல் ஒரு திருத்தம் செய்யப்பட்ட பிறகு அதன் பங்கு சற்று விரிந்தது. இங்கிருந்து நேபாளத்திற்கும் செல்ல முடியும். ஆனால், அனைத்து தேவைகளும் சரக்கு ரயில்கள் சம்பந்தமானவை. பயணிகள் ரயில் என்பது இந்த நிலையத்தைப் பொறுத்தவரை மறந்து போன ஒரு கனவு.
வெறிச்சோடிய மேடை : இன்றைக்கு, சிங்காபாத் ரயில் நிலைய நடைமேடைகள் மக்கள் நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கின்றன. டிக்கெட் கவுண்டர்கள் மூடப்பட்டு பாழடைந்து போய் உள்ளது. ஒரு காலத்தில் டார்ஜிலிங் மெயிலின் சத்தம் இந்த ரயில் நிலையத்தில் காத்து கொண்டிருந்த மக்களின் காதை கிழித்தது. அந்த சத்தம் இப்போது இல்லை.
கடைசி நிலையம்: சிங்காபாத் தான் இந்தியாவின் கடைசி நிலையம். ஆனால், அங்கே ரயில்கள் நிற்காது நாட்டின் கடைக்கோடியில் இந்த ரயில் நிலையம் அமைதியாக ஒரு காவலாளியைப் போல எல்லையைக் காவல் காத்து வருகிறது. அங்கே அமைதி இல்லை மயான அமைதி நிலவுகிறது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications