இந்தியாவின் டார்கெட் "Haji Pir pass" 60 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானை கதறவிட்டு மண்டிபோட வைத்த இடம்!
டெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள Haji Pir pass பகுதியைத்தான் இந்தியா தற்போதைய சூழ்நிலையில் தாக்கி கைப்பற்றக் கூடும் என்கின்றனர் பாதுகாப்பு வல்லுநர்கள். 60 ஆண்டுகளுக்கு முன்னர் Haji Pir pass பகுதியை இந்தியா கைப்பற்றி பின்னர் தாஷ்கண்ட் ஒப்பந்தத்தால் பாகிஸ்தானிடமே கொடுத்த இடம்தான் என்கின்றனர் பாதுகாப்பு வல்லுநர்கள்.
இந்தியா- பாகிஸ்தான் இடையேயான யுத்தத்தில் அதிகம் பேசப்பட்ட இடங்களில் ஒன்றுதான் Haji Pir pass - ஹாஜி பீர் கணவாய். ஜம்மு காஷ்மீரின் பீர் பாஞ்சல் மலைத் தொடரில் உள்ளது ஹாஜி பீர் கணவாய். ஜம்மு பிராந்தியத்தை ஶ்ரீநகரில் இருந்து பிரிக்கக் கூடிய பகுதி. ஒருங்கிணைந்த ஜம்மு காஷ்மீரில் பிரதான வர்த்தக சாலையாக இருந்தது இந்த ஹாஜி பீர் கணவாய்.

ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்த போது ஹாஜி பீர் கணவாயும் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது. இதனைத் தொடர்ந்து இந்த கணவாய் பகுதி வழியாகவே பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவச் செய்தது பாகிஸ்தான்.இதனால் இது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவும் மாறியது.
1965-ம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் இடையே உக்கிரமான யுத்தம் நடந்து கொண்டிருந்தது. அப்போது மேஜர் ரஞ்சித் சிங் தயாள் தலைமையிலான இந்திய படையணி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் ஊடுருவி ஹாஜி பீர் கணவாயை சூழ்ந்திருந்த மலை சிகரங்களை அடுத்தடுத்து வெற்றிகரமாக கைப்பற்றியது. இதனால் ஹாஜி பீர் கணவாயும் இந்திய ராணுவத்திடம் வீழ்ந்தது. ஹாஜி பீர் கணவாயை இந்தியா கைப்பற்றிவிட்டதால் ஒட்டுமொத்தமாக, பாகிஸ்தான் ஆக்கிரமித்த ஜம்மு காஷ்மீரின் இதர நிலப் பகுதியும் எந்த நேரத்திலும் இந்தியா வசமாகிவிடும் சூழ்நிலை வந்துவிட்டது.
அந்த தருணத்தில்தான் சோவியத் ரஷ்யாவின் தலையீட்டில் தாஷ்கண்ட்டில் இந்தியா- பாகிஸ்தான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் படி, இந்தியா வெற்றிகரமாக கைப்பற்றிய ஹாஜி பீர் கணவாய் பகுதி மீண்டும் பாகிஸ்தான் வசமே ஒப்படைக்கப்பட்டது. அன்று மட்டும் இந்த கணவாய் ஒப்படைக்காமல் போயிருந்தால் ஜம்மு காஷ்மீரின் விதியும் மாறியிருக்கலாம் என்பதுதான் பாதுகாப்பு தரப்பினரின் கருத்து.
தற்போது, ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலையடுத்து பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் நிலப் பகுதிகளை இந்திய ராணுவம் மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கும் என கூறப்படுகிறது. அப்படியான ஒரு யுத்த நடவடிக்கையில் இந்தியா இறங்கும் போது அதன் முக்கிய இலக்காக மீண்டும் ஹாஜி பீர் கணவாய்தான் இருக்கும்; இந்த கணவாயை இம்முறை மீண்டும் இந்தியா கைப்பற்றிவிட்டாலேயே பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் நிலப் பகுதிகளை மறந்துவிட வேண்டியதுதான் என்கின்றனர் பாதுகாப்பு தரப்பு வல்லுநர்கள்.
-
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications