துண்டு பேப்பரில் வெடிகுண்டு மிரட்டல்.. பதறிய பயணிகள்! இண்டிகோ விமானம் அகமதாபாத்தில் அவசர தரையிறக்கம்
அகமதாபாத்: குவைத்தில் இருந்து டெல்லி வந்த இண்டிகோ விமானம் குஜராத் அகமதாபாத்தில் அவசர தரையிறக்கபட்டது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டு, பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தினர்.
இண்டிகோ விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, தீவிர சோதனை நடத்தப்பட்டது. இண்டிகோ விமானத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.

இன்று காலை 6.40 மணியளவில் 180 பயணிகளுடன் இண்டிகோ விமானம் ஒன்று குவைத்தில் இருந்து டெல்லி நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த சூழலில், விமானத்தின் உள்ளே கிடந்த ஒரு பேப்பரில் இந்த விமானத்தைக் கடத்தப்போவதாகவும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் மிரட்டல் விடுத்து எழுதப்பட்டிருந்தது.
இதனைக் கவனித்து பதறிப்போன விமானிகள், உடனடியாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தை எச்சரித்தனர். இதையடுத்து, விமானம் அகமதாபாத்திற்கு திருப்பி விடப்பட்டது. விமானத்தை அவசரமாக அகமதாபாத்தில் தரையிறக்கினர்.
பின்னர் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, அவர்களது உடமைகள் முழுமையாக சோதனையிடப்பட்டன. விமானம் முழுவதும் சல்லடை போட்டு சோதனை செய்யப்பட்டது. இந்தச் சோதனையில் சந்தேகத்திற்கிடமாக எந்தப் பொருட்களும் கிடைக்கவில்லை.
இதையடுத்து இந்த வெடிகுண்டு மிரட்டல் போலியானது என உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து மீண்டும் விமானம் டெல்லி நோக்கி புறப்பட்டது. இந்த மிரட்டல் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதேபோல, கடந்த ஜனவரி 22 ஆம் தேதி டெல்லியில் இருந்து புனே வந்த இண்டிகோ விமானம் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக தரையிறக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications