இந்தூரில் பயங்கரம்... 4 மாத குழந்தையை பலாத்காரம் செய்து கொலை செய்த கொடூரனுக்கு தூக்கு

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் 4 மாத குழந்தையை தூக்கி சென்று பலாத்காரம் செய்து கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.

இந்தூரில் ராஜாவாடா கோட்டை பகுதியைச் சேர்ந்த பலூன் விற்கும் தொழிலாளி. இவருக்கு வீடில்லாததால் மனைவி மற்றும் 4 மாத குழந்தையுடன் தெருவில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்.

அவர்களுடன் உறவினரான நவீன் காட்கே (23) என்ற இளைஞரும் படுத்திருந்தார். கடந்த 20-ஆம் தேதி அதிகாலை வேளையில் அந்த குழந்தையை தூக்கி சென்ற அந்த இளைஞர் 50 மீட்டர் தொலைவில் இருந்த ஒரு இடத்தில் வைத்து அந்த குழந்தையை பலாத்காரம் செய்தான்.

குழந்தையை காணவில்லை

குழந்தையை காணவில்லை

பின்னர் அந்த குழந்தை அழுது கொண்டே இருந்ததால் தான் எங்கே மாட்டிக் கொள்வோமோ என பயந்து கொண்டு அந்த குழந்தையை கொலை செய்து விட்டான். இதனிடையே பொழுதுவிடிந்தவுடன் தம்பதி குழந்தையை காணாமல் தேடி அலைந்தனர்.

குழந்தையின் உடல்

குழந்தையின் உடல்

அப்போது அங்கு கடையை திறக்க வந்த ஒருவர் குழந்தையின் உடலை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் வந்து அந்த குழந்தையின் உடலை மீட்டனர்.

குழந்தையை கடத்தி

குழந்தையை கடத்தி

குழந்தையின் அந்தரங்க இடத்திலும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆராய்ச்சி செய்தனர். அதில் அப்போது ஒரு இளைஞர் குழந்தையை தோளில் கொண்டு செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

இளைஞர் நவீன் கைது

இளைஞர் நவீன் கைது

விசாரணையில் அவர் நவீன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அவரை போலீஸார் இழுத்து சென்ற போது ஆத்திரம் தாங்காமல் அங்கிருந்தோர் செருப்பை கழற்றி நவீனை கண்டபடி அடித்துள்ளனர்.

குழந்தைக்கு என்ன தெரியும்

குழந்தைக்கு என்ன தெரியும்

இந்தூர் நீதிமன்றத்துக்கு அழைத்து சென்ற நவீனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கும்படி வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது நீதிபதி வர்ஷா சர்மா கூறுகையில் இது மிகவும் காட்டுமிராண்டித்தனம். குழந்தைக்கு அழுவதை தவிர வேறு என்ன தெரியும்.

தூக்கு தண்டனை

தூக்கு தண்டனை

அப்படிப்பட்ட ஒன்றும் தெரியாத குழந்தையை இப்படி செய்தது கொடூரமான செயலாகும் என்று கூறிய நீதிபதி, நவீனுக்கு தூக்கு தண்டனை வழங்கினார். இதையடுத்து சிறைக்கு அழைத்து செல்வதற்கு முன்னர் தனது தாயையும் சகோதரியையும் பார்க்க வேண்டும் என நவீன் விருப்பம் தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A 4 months old infant who was sleeping with her family on a street was taken to vacant area and rapes and murders.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற