பெல்ட் அடி, உதை, கண்ணீர், காயம்: இது தான் இந்திராணியின் குழந்தைப் பருவம்

Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்திராணி பள்ளியில் படிக்கையில் அவரை அவரது தந்தை குடிபோதையில் பெல்ட்டால் அடித்து நொறுக்கியுள்ளார்.

ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜியின் குழந்தைப் பருவம் கொடுமையானதாக இருந்தது தெரிய வந்துள்ளது. இந்திராணி தனது மகளையே கழுத்தை நெறித்துக் கொன்று அவரின் உடலை எரித்துள்ளார்.

இந்திராணி பற்றி அவரது உறவினர் ஒருவர் கூறுகையில்,

இந்திராணி

இந்திராணி

உபேந்திர குமார் போரா மற்றும் துர்கா ரீனா போராவின் ஒரே மகள் இந்திராணி. அவர்களின் திருமணம் மகிழ்ச்சியானது இல்லை. அவர்கள் வெளியே செல்கையில் இந்திராணியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு சென்றுவிடுவார்கள். வீடு திரும்பிய வேகத்தில் அவரின் பெற்றோர் சண்டை போடுவார்கள்.

அன்பு

அன்பு

குழந்தைப் பருவத்தில் இந்திராணிக்கு அவரின் பெற்றோரிடம் இருந்து அன்பு, பாசம் என்ற எதுவும் கிடைக்கவில்லை. குமார் குடித்துவிட்டு போதையில் இந்திராணியை தனது

லெதர் பெல்ட்டால் அடித்து நொறுக்குவார். மனைவி மீது இருக்கும் வெறுப்பை அவர் மகள் மீது காட்டினார்.

டிரைவருடன் ஓட்டம்

டிரைவருடன் ஓட்டம்

இந்திராணி பள்ளியில் படிக்கையில் தனது பெற்றோரிடம் இருந்து தப்பிக்க வீட்டில் வேலை செய்த கார் டிரைவருடன் ஓட்டம்பிடித்தார். ஆனால் ரயில் நிலையத்தில் வைத்து அவரை பிடித்து அழைத்து வந்துவிட்டனர்.

விடுதி

விடுதி

இந்திராணியை அவரது பெற்றோர் ஷில்லாங்கில் உள்ள விடுதியில் சேர்த்தனர். அங்கு தான் அவருக்கு முதல்முறையாக சுதந்திரம் கிடைத்தது என்றார் அந்த உறவினர்.

காயம்

காயம்

இந்திராணி குழந்தையாக இருக்கையில் எங்கள் வீட்டிற்கு அழுது கொண்டே வந்து தனது தந்தை அடித்ததால் ஏற்பட்ட காயங்களை எங்களிடம் காண்பிப்பார் என்று குமாரின் வீட்டிற்கு அருகே வசிக்கும் மூதாட்டி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+