இந்திராணி முகர்ஜியின் உடல்நலம் கவலைக்கிடமானதற்கு என்ன தான் காரணம்?
மும்பை: ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி அளவுக்கு அதிகமாக மாத்திரைகள் சாப்பிடவில்லை என்று தற்போது கூறப்படுகிறது.
ஷீனா போரா கொலை வழக்கில் அவரது தாய் இந்திராணி முகர்ஜி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அவர் மும்பையில் உள்ள ஜே.ஜே. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிடிருக்கக்கூடும் என்று மருத்துவமனையின் டீன் டி.பி. லஹானே தெரிவித்திருந்தார்.
ஆபத்தான நிலையில் இருந்த இந்திராணி தற்போது நலமாக உள்ளார். அவர் நாளை சிறை திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருந்து
இந்திராணி மன அழுத்தத்திற்கான மாத்திரையை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டதால் அவர் சுயநினைவை இழந்ததாக முதலில் லஹானே தெரிவித்தார்.

இந்திராணி
முதலில் செய்யப்பட்ட பரிசோதனையில் இந்திராணியின் சிறுநீரில் மன அழுத்தத்திற்கான மருந்தான பென்சோடியசிபைனின் அளவு 2088 அளவுக்கு இருந்தது. வழக்கமாக அந்த மருந்தை உட்கொள்பவர்களின் சிறுநீரில் அது 200 அளவுக்கு தான் இருக்கும். எனவே இந்திராணி அந்த மருந்தை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டதால் சுயநினைவை இழந்தார் என்றார் லஹானே.

இல்லையே
இந்திராணியின் ரத்தம் மற்றும் சிறுநீரில் எந்த மருந்தும் அதிக அளவில் உட்கொண்டதற்கான தடயம் இல்லை என்று மாநில தடயவியல் ஆய்வக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திராணிக்கு இரண்டு முறை பரிசோதனை செய்யப்பட்டது.

அது வேற இது வேற
முதலில் இந்திராணி அளவுக்கு அதிகமாக மாத்திரிகைள் உட்கொண்டார் என்று லஹானே தெரிவித்தார். பின்னர் பரிசோதனையில் இந்திராணி எந்த மருந்தையும் அதிக அளவில் எடுக்கவில்லை என்று வந்ததையும் லஹானே ஆதரித்துள்ளார். வேறு வேறு பரிசோதனைகள் செய்துள்ளதால் வெவ்வேறு முடிவுகள் கிடைத்துள்ளன என்றார்.

என்ன காரணம்?
இந்திராணி எந்த மருந்தையும் அதிக அளவில் உட்கொள்ளவில்லை என்றால் அவரது உடல்நலம் திடீர் என கவலைக்கிடமானதற்கு என்ன காரணம் என்பது மட்டும் இன்னும் குழப்பமாகவே உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications