சீக்கியர் வேடத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி பஞ்சாப்பில் பயங்கர வன்முறைகளை தூண்ட பாக். சதி- திடுக் தகவல்
சண்டிகர் : பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர் போல தீவிரவாதிகளை ஊடுருவச் செய்து பயங்கர வன்முறைகளை கட்டவிழ்த்துவிட பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. அமைப்பு திட்டமிட்டுள்ளதாக பஞ்சாப் மாநில அரசை உளவுத்துறை எச்சரித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்களின் புனித நூல் திருடப்பட்டு பின்னர் கிழித்தெறியப்பட்டு நடுவீதியில் வீசப்பட்டது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தங்களது புனித நூலை அவமதித்தவர்களை கைது செய்யக் கோரி சீக்கியர்கள் தொடர் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது மிகப் பெரிய வன்முறையாக வெடித்துள்ளது. இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் மத்திய அரசின் உளவுத்துறை சார்பாக ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், ஐ.எஸ்.ஐ. அமைப்பு, சீக்கியர்களின் நடை, உடை, பாவனைகளை கற்றறிந்துள்ள பயங்கரவாதிகளை சீக்கியர் வேடத்தில் பஞ்சாப் மாநிலத்தில் ஊடுருவ செய்திருப்பதாகவும், இவர்களை கொண்டு, மாநிலத்தில் மிகப் பயங்கர வன்முறையை உருவாக்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாசவேலைக்காக 15 லிருந்து 20 வரையிலான பயங்கரவாதிகளுக்கு மும்பை தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சையத் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்கிழமையன்று ஃபாரித் கோட் பகுதியில் இப்படி ஊடுருவிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நபர்களுக்கு துபாய் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் இருந்து இவர்களுக்கு நிதி உதவி கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பஞ்சாப் மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் கூறுகையில், மாநிலம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் மத்திய போலீஸ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications