Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரயில்வே நிதி நிலைமை மோசமாக இடைக்கால பட்ஜெட் காரணம்- சதானந்தகவுடா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்த நிதியாண்டில் ரயில்வேக்கு ரூ.1,64,374 கோடி வருவாயும், ரூ.1.49 கோடி செலவும் ஆக உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Interim Budget cause financial position of Railways has undergone a change: Sadananda Gowda

இதுகுறித்து ரயில்வே அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறுகையில், ரயில்வே அமைச்சகத்தின் நிதி நிலைமை மாறுபாடு அடைய கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டும் ஒரு காரணமாகும். உதாரணத்துக்கு, ரயில்வே 1050.18 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இந்த வருவாய், மதிப்பீடு செய்ததைவிட ரூ.94 கோடி குறைவாகும். அதேபோல, பயணிகள் மூலமாக கிடைக்கும் வருவாயும் மதிப்பீடு செய்ததைவிட, ரூ.986 கோடி குறைந்துள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் மதிப்பீட்டை அதிகரித்ததே இலக்கை எட்டமுடியாமல் போனதற்கு காரணம்.

See the difference between UPA #RailBudget and NDA's #RailBudget2014 !! pic.twitter.com/uVjGe02kLS
— Dr.Sweta Patel (@DrSweta148) July 9, 2014

பட்ஜெட் மதிப்பீட்டுபடி, 2014-15ம் நிதியாண்டில், 1,64,374 ரூபாய் வருவாயும், 1,49,176 ரூபாய் செலவீனமும் ஆகும். செயல்பாட்டு விகிதம் 92.5 சதவிகிதமாக இருக்க உள்ளது. கடந்த நிதியாண்டைவிட இது 1 சதவீதம் அதிகமாகும்.

ரயில் பயணிகள் எண்ணிக்கை 12.8 சதவீதம் அதிகரித்து அதன் மூலமாக ரூ.1,39,558 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அதே நேரம் மறுமதிப்பீடு செய்யப்பட்ட தொகையைவிட இது குறைவாகும். அதே நேரம் பணி செலவீனங்கள் ரூ.97,571 கோடியாக அதாவது கடந்த நிதியாண்டைவிட ரூ.511 கோடி அதிகரித்துள்ளது.

2013-14ம் நிதியாண்டில், எதிர்பார்த்ததைவிட ரயில் பயணிகள் எண்ணிக்கை வளர்ச்சி குறைவாக இருந்தது. அதே நேரம் செலவீனமோ எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இடைக்கால பட்ஜெட்டில் ரயில் கட்டணத்தை உயர்த்தியபோதிலும், தேர்தல் காரணமாக அது உயர்த்தப்படவில்லை. இதன் காரணமாகவே புதிய அரசு வந்ததும் ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டதாக நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+