மகாபாரத காலத்திலேயே இன்டர்நெட், சேட்டிலைட் இருந்தது.. அடித்து சொல்லும் திரிபுரா முதல்வர்!
மகாபாரத காலத்திலேயே இன்டர்நெட் மற்றும் சேட்டிலைட் இருந்தது என திரிபுரா முதல்வர் பிப்லாப் தேப் கூறியுள்ளார்.
Recommended Video

அகர்தலா: மகாபாரத காலத்திலேயே இன்டர்நெட் மற்றும் சேட்டிலைட் இருந்தது என திரிபுரா முதல்வர் பிப்லாப் தேப் கூறியுள்ளார்.
திரிபுராவில் கடந்த கால் நூற்றாண்டாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆட்சி நடைபெற்று வந்தது. அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றதன் மூலம் அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சகாப்தம் முடிவுக்கு வந்தது.
கடந்த திரிபுரா சட்டசபை தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத பாரதீய ஜனதா, இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து வரலாற்று சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து திரிபுரா மாநில முதல்வராக பிப்லாப் தேப் பதவியேற்றார்.

இணையதள பயன்பாடு
இந்நிலையில் அகர்தலாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதல்வர் பிப்லாப் தேப் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், இணையதள பயன்பாடு என்பது மகாபாரத காலத்திலிருந்தே உள்ளது என்றார்.

செயற்கைகோள் தொடர்பு
கண்பார்வையற்ற திரிதராஷ்டிரர், குருசேத்ர யுத்தம் நடந்துகொண்டிருந்தபோது, போர்க்களத்தின் அருகே இல்லாதபோதே, அங்கு நடைபெறும் தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொண்டார். இது அப்போது இருந்த தொழில்நுட்பம் மற்றும் செயற்கைக்கோள் தொடர்பின் மூலமே சாத்தியமானது என்றும் பிப்லாப் தேப் தெரிவித்தார்.

திரிபுரா முதல்வர்
ஐரோப்பிய யூனியன்கள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணையளதம் தங்களின் கண்டுபிடிப்பு என கூறலாம். ஆனால், உண்மையில், இவை அனைத்தும் இந்தியாவின் தொழில்நுட்பம் தான் என்றும் திரிபுரா முதல்வர் தெரிவித்துள்ளார்.

பணக்கார கலாச்சாரம்
பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் இணையதளம் மற்றும் செயற்கைகோள்கள் இருந்துள்ளன என்றும் அவர் கூறினார். மிகவும் பணக்கார கலாச்சாரம் இந்தியாவுக்கு சொந்தமானது என்பது எனக்கு பெருமை அளிக்கிறது என்றும் பிப்லாப் தெரிவித்தார்.

இந்தியர்களே..
இன்றும் கூட இணையதளம் மற்றும் மென்பொருள் தொழில்நுட்பத்தில் நாம் முன்னோடியாக இருக்கிறோம் என்ற அவர், மைக்ரோசாப்ட் நிறுவனம் அமெரிக்க நிறுவனமாக இருந்தாலும் கூட, அந்த நிறுவனத்தில் பெரும்பாலான என்ஜினியர்கள் இந்தியர்களே என்றார்.

சர்ச்சை
திரிபுரா முதல்வர் பிப்லாப் தேப் இன்டர்நெட் மற்றும் சேட்டிலைட் சேவை மகாபாரத காலத்திலேயே இருந்ததாக கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications