கொல்கத்தா மருத்துவ மாணவி வழக்கு! ப்ளான் பண்ணி என்னை மாட்டி விட்டாங்க..கோர்ட்டில் சத்தமிட்ட சஞ்சய் ராய்
கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய் மீதான விசாரணை இன்று தொடங்கியது. இந்த விவகாரத்தில் கூடுதல் குற்றப்பத்திரிக்கையினை சிபிஐ சந்திப் கோஸுக்கு எதிராக தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில் தான் திட்டமிட்டு இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளதாக சஞ்சய் ராய் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேற்குவங்க மாநிலம் வடக்கு கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுகலை பெண் பயிற்சி மருத்துவக் கல்லூரி மாணவி கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

உடற்கூறு ஆய்வில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரிய வந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை இந்த பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவம் ஏற்படுத்தியது.
இந்நிலையில் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த நிலையில் மாணவி கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதை அடுத்து அவர்கள் கடந்த சில நாட்களாக சம்பவம் நடைபெற்ற மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முழுவதிலும், தீவிர சோதனை நடத்தி விசாரணை நடத்தினர்.
கொலையான பயிற்சி மருத்துவர் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக உடற்கூறு ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்ட மாணவியின் உடல் ஆகஸ்ட் 9ஆம் தேதி உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. கைகளைக் கொண்டு கழுத்தை நெரித்ததால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார்.
மேலும், பாலியல் வன்கொடுமை நடந்ததற்கான மருத்துவ ஆதாரங்கள் கிடைத்திருக்கிறது. அந்த மாணவியின் பிறப்புறுப்பில் 151 கிராம் ஆண் திரவம் மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில் அவை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. உடலில் சில இடங்களில் ரத்தம் உறைந்திருக்கிறது. மூக்கு, கழுத்து, கை, கண்ணம், உதடு உள்ளிட்ட வெளிப்பகுதிகளில் 16 இடங்களிலும், கழுத்து, உள்தசை, உச்சந்தலை என உள்பகுதிகளில் ஒன்பது இடங்களில் மிக கொடூரமான காயங்கள் இருந்தது உடற்கூறு ஆய்வில் தெரிய வந்தது.
இந்த நிலையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு மேற்கு வங்கத்தில் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் தொடர்ந்து போராடினர். பின்னர் சிறிது காலம் முடங்கியிருந்த போராட்டம் மீண்டும் உயிர் பெற்றுள்ளது.

இந்த நிலையில் சஞ்சய் ராய்க்கு எதிரான வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பலத்த பாதுகாப்புடன் குற்றவாளி சஞ்சய் ராயை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். தொடர்ந்து ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்னாள் முதல்வரான சந்திப் கோஸுக்கு எதிராக கூடுதல் குற்ற பத்திரிக்கை சிபிஐ சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து விசாரணை முடிவடைந்து குற்றவாளி சஞ்சய் ராயை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். அப்போது தான் இந்த வழக்கில் திட்டமிட்டு சிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும், உண்மையான குற்றவாளிகள் காப்பாற்றப்பட்டுள்ளதாக முழக்கமிட்டார். மேலும் கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் வினித் கோயல் தன்னை மருத்துவ கல்லூரி மாணவி வழக்கில் திட்டமிட்டு சிக்க வைத்துள்ளதாகவும், அவர்தான் அனைத்திற்கும் காரணம் என முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications