காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்.. 5 வீரர்கள் வீரமரணம்.. விசாரணை தீவிரம்
ஜம்மு: காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 5 வீரர்கள் வீரமரணமடைந்த சம்பவத்தை அடுத்து விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.
காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம், இந்தியா- பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான ராணுவ முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் இருந்து ராணுவ வீரர்கள் வாகனங்களில் எல்லைப்பணிக்கு சென்று வருவர்.

அந்த வகையில் நேற்று பிற்பகல் சுமார் 3 மணியளவில் ரஜோரி செக்டாரில் பிம்பர்காலி- பூஞ்ச் இடையே ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு ராணுவ வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் ராஷ்ட்ரீய ரைபிள் படைப்பிரிவை சேர்ந்த ஏராளமான வீரர்கள் இருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் கனமழை பெய்து கொண்டிருந்தது. பிற்பகல் 3 மணி என்றாலும் கூட இருள் சூழ்ந்து கொண்டிருந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட பயங்கரவாதிகள் சிலர் ராணுவ வாகனத்தை நோக்கி கையெறி குண்டுகளை வீசினர். மேலும் துப்பாக்கியாலும் சுட்டனர்.
இதில் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த தாக்குதலில் ராணுவ வாகனம் தீப்பிடித்து எரிந்தது. அதில் இருந்த வீரர்கள் சுதாரிப்பதற்குள் பயங்கரவாதிகளின் தாக்குதல் நடந்து முடிந்துவிட்டது. இந்த தாக்குதலை நடத்தியதும் பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிஓடினர். சற்றும் எதிர்பாராத இந்த தாக்குதலில் 5 வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
ஒருவர் காயமடைந்தார். இந்த தாக்குதலை அடுத்து ராஷ்ட்ரீய ரைபிள் படையை சேர்ந்த ஏராளமான வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்கள் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிஓடிய பயங்கரவாதிகளுக்கு எதிராக தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்காக அந்த பகுதியை ராணுவம் சுற்றி வளைத்தது, போக்குவரத்தையும் ரத்து செய்தது.
இறந்த வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. படுகாயமடைந்த வீரரை மீட்டு ராஜ்புரியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். இந்தத் தாக்குதலை ராணுவம் உறுதி செய்தது. காஷ்மீரில் நடந்த இந்த தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications