ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ஜூன் 6-ம் தேதி ஆஜராக ப.சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன்
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜூன் 6-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜூன் 6-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
மும்பையை சேர்ந்த ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனமானது இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமானதாகும். 2007ம் ஆண்டு, மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா கருப்பு பண முறைகேடு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது ஏற்கனவே வழக்கு பதியப்பட்டு இருக்கிறது. இதில் 307 கோடி வரை முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது.
இது தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகும் படி சிபிஐ கார்த்தி சிதம்பரத்திற்கு நோட்டிஸ் அனுப்பி இருந்தது. ஆனால் கார்த்தி சிதம்பரம் ஆஜாராமல் இருந்தார். இந்த நிலையில் கார்த்தி சிதம்பரம் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் தற்போது ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன் அளித்துள்ளது. ஜூன் 6-ம் தேதி நடக்கும் வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராக ப.சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை ஜூலை 3ஆம் தேதி வரை கைது செய்ய டெல்லி ஹைகோர்ட் தடைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications