கியா ரே பெட்டிங்கா? ஐபிஎல்லை வைத்து சூதாட்டம் செய்த கும்பல்.. மடக்கி பிடித்த ஹைதராபாத் போலீஸ்!
ஐபிஎல் போட்டியை வைத்து ஹைதராபாத்தில் பெட்டிங் செய்த கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டு இருக்கிறது.
ஹைதராபாத்: ஐபிஎல் போட்டியை வைத்து ஹைதராபாத்தில் பெட்டிங் செய்த கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டு இருக்கிறது.
இதுவரை நடந்த லீக் போட்டிகளை வைத்து அவர்கள் பெட்டிங் செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களை போலவே இந்தியாவின் பிற பகுதியிலும் பெட்டிங் நடக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதில் கைது செய்யப்பட்ட நபர்கள் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். ஐபிஎல் போட்டி விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த சமயத்தில் இப்படி பெட்டிங் விஷயம் வெளியே வந்தது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரகசியம்
இந்த பெட்டிங் குழு பற்றி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்து இருக்கிறது. கடந்த வாரம் முக்கிய இரண்டு அணிகள் மோதிய போது அதில் எந்த அணி வெற்றி பெறும், எவ்வளவு ஸ்கோர் என்று இவர்கள் பெட் கட்டி, பெட்டிங் செய்து இருக்கிறார்கள். கடைசி நேரத்தில் வந்து போலீஸ் ரகசியமாக கைது செய்து இருக்கிறது.

1.5 லட்சம் ரூபாய்
மொத்தம் 10 பேர் வரை இதில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இவர்களிடம் இருந்து 1.5 லட்சம் வரை பணம் கைப்பற்றப்பட்டு இருக்கிறது. இவர்கள் இப்போது ரகசியமாக வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறப்படுகிறது.

எப்படி நடக்கிறது
இவர்கள் தங்களுக்குள்ளாகவே பணம் கட்டி இப்படி பெட்டிங் செய்து கொள்கிறார்கள். இது இந்தியா முழுக்க நடப்பதாக கூறப்படுகிறது. இந்த ஐபிஎல் நேரத்தில் மட்டும், இப்படி ஒவ்வொரு பேட்டிங் குழுவிடமும் கோடிக்கணக்கில் பணம் புரளும் என்று கூறப்படுகிறது. தற்போது கைதான குழு மிகவும் சின்ன குழுதான்.

தொடர்பு கிடையாது
இவர்களுக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது. தானாக ஐபிஎல் வீரர்கள் மீது பணம் கட்டி இவர்கள் இப்படி விளையாடுகிறார்கள். அதனால் இது கிரிக்கெட் வீரர்களின் சூதாட்டம் என்று பார்க்க முடியாது. ஆனாலும் இப்படி கிரிக்கெட் போட்டியை வைத்து பெரிய அளவில் பெட்டிங் மார்க்கெட் உருவாக்குவது தவறு என்று போலீஸ் கூறியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications