விராட் கோலிக்கு மிரட்டல்..அகமதாபாத்தில் ஐஎஸ்ஐஎஸ்? ப்ளானை தள்ளிப் போட்ட ஆர்சிபி! இதுதான் காரணமா?
அகமதாபாத்: இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக ஆடும் விராட் கோலிக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதாகவும், அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் குஜராத் போலீசார் எச்சரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து இன்று நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவிருந்த பயிற்சியை ஆர்சிபி ரத்து செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ஐபிஎல் இறுதிக்கட்டத்தை சந்தித்துள்ளது. லீக் போட்டியின் முடிவில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட பலம் வாய்ந்த அணிகள் வெளியேற்றப்பட்டன.

இதையடுத்து தற்போது குவாலிபயர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முன்னேறியது.
ஐபிஎல் போட்டி: இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் எலிமினேட்டர் சுற்று இன்று அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் இதற்கான பயிற்சியை ஆட்டம் அகமதாபாத் குஜராத் கல்லூரி மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் தீவிரவாத அச்சுறுத்தலின் பேரில் ஆர்சிபி அணியின் பயிற்சி ஆட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாகவும், மேலும் விராட் கோலியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தகவல் வெளியானது.
தீவிரவாத அச்சுறுத்தல்: இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இன்று திட்டமிட்டபடி போட்டி நடக்குமா எனவும் ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக தீவிரவாத அச்சுறுத்தல் எதுவும் இல்லை என குஜராத் கிரிக்கெட் அசோசியேஷன் அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,"குஜராத் கல்லூரி மைதானத்தில் மதியம் 2 மணி முதல் 5 மணி வரை பயிற்சி செய்ய பெங்களூர் அணியின் நிர்வாகம் திட்டமிட்டு இருந்தது.
மறுப்பு: ஆனால் கோடை காலம் என்பதால் மாலை 6 மணிக்கு வரை வெளிச்சம் இருக்கும் எனவே அப்போது பயிற்சி மேற்கொள்ளலாம் என திட்டமிடப்பட்டது. தொடர்ந்து வெப்ப அலை வீசியதால் பெங்களூர் அணி பயிற்சி ரத்து செய்யப்பட்டது எனவும், அதே நேரத்தில் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
உண்மையாக இருக்கலாம்: இந்த நிலையில் தீவிரவாத அச்சுறுத்தல் செய்தி உண்மையாக இருக்கலாம் என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காரணம் கடந்த 20ஆம் தேதி கொழும்பிலிருந்து அகமதாபாத் வந்த நான்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். முகமது நுஸ்ரத், முகமது நஃப்ரான், முகமது ஃபாரிஸ் மற்றும் முகமது ரஷ்தீன் ஆகிய நான்கு பேர் கைதான நிலையில் இந்தியாவில் அவர்கள் சதி செயலில் ஈடுபட திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
காரணம் என்ன? : மேலும் அவர்கள் செல்லவிருந்த இடங்களில் போலீசார் நடத்திய சோதனையில் ஆயுதங்கள், வீடியோக்கள் லேப்டாப்புகள் மற்றும் மர்ம குறிப்புடன் செய்திகள் கிடைத்ததாக கூறப்படுகிறது. எனவே அவர்கள் அகமதாபாத்தில் ஆர்சிபி வீரர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தலாம் என்பதால்தான் தற்போது பயிற்சி போட்டி ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications