For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'ஐ.பி.எல். பிக்ஸிங் வழக்கில் டோணிக்கும் தொடர்பு-பொய்யான வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்'

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ஐ.பி.எல். பிக்ஸிங் வழக்கில் இந்திய அணி கேப்டனுக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவர் முத்கல் கமிட்டியிடம் பொய்யான வாக்குமூலம் கொடுத்திருப்பதாகவும் உச்சநீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.

ஐ.பி.எல். பிக்ஸிங் வழக்கில் முத்கல் கமிட்டியின் அறிக்கை மீது உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. முத்கல் கமிட்டி அறிக்கையில், இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனால் சீனிவாசன் பதவி விலக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் கூறியிருந்தது.

ஆனால் சீனிவாசன் பதவி விலகவில்லை. இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது விசாரணை முடியும் வரை சீனிவாசன் பதவியில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் யோசனை தெரிவிக்கப்பட்டது.

IPL Match fixing: Prosecution claims 'Dhoni guilty of giving false information'

அப்போது, கிரிக்கெட்டின் நலன் கருத்தி உச்சநீதிமன்றம் கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்திருந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் போது அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி, சீனிவாசனுக்கு சொந்தமான இந்தியா சிமெண்ட்ஸின் பணியாளர். அவர் முத்கல் கமிட்டியிடம் வாக்குமூலம் கொடுத்த போது, குருநாத் மெய்யப்பன் ஒரு ஜாலிக்காகத்தான் பெட் கட்டியதாக கூறியிருக்கிறார். ஆனால் முத்கல் கமிட்டியோ குருநாத் மெய்யப்பன் முழு வீச்சில்தான் பிக்ஸிங், பெட்டிங்கில் ஈடுபட்டார் என்று கூறிகிறது.

ஆகையால் கேப்டன் டோணி, குருநாத் மெய்யப்பனைக் காப்பாற்றும் வகையில் பொய்யான ஒரு வாக்குமூலத்தை முத்கல் கமிட்டியிடம் தெரிவித்திருக்கிறார், அவருக்கும் இந்த பிக்ஸிங் குற்றத்தில் தொடர்பு இருக்க்கிறது என்று வாதாடினார்.

English summary
After the Supreme Court came down hard on the BCCI chief N Srinivasan on Tuesday asking him to step down to allow a fair probe in the IPL spot fixing and betting scandal, extreme pressure has started mounting on him from all sides.Prosecution counsel Harish Salve argues Indian skipper Ms Dhoni is guilty of corrupt conduct for covering up/giving false statement to Mukul Mudgal Committee.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X