Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவுக்கு பலத்த அடி? 40 வருஷம் பிறகு உ.பி.யின் அம்ரோஹா காங்கிரஸ் வசமாகிறதா?

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி கடந்த 40 ஆண்டுகளாக கால்பதிக்க முடியாத லோக்சபா தொகுதியாக அம்ரோஹா உள்ளது. இந்நிலையில் தான் 40 ஆண்டுகளுக்கு பிறகு வரும் லோக்சபா தேர்தலில் இந்த தொகுதியில் பாஜக மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளை தாண்டி காங்கிரஸ் வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் அதிக லோக்சபா தொகுதிகளை கொண்ட மாநிலம் உத்தர பிரதேசம் தான். இங்கு மட்டும் 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இந்த மாநிலத்தில் அதிக தொகுதிகளை வெல்லும் கட்சியால் மத்தியில் எளிமையாக ஆட்சியை பிடிக்க முடியும். தற்போது உத்தர பிரதேசத்தை எடுத்து கொண்டால் அது பாஜகவின் கோட்டையாக உள்ளது. மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார்.

Is After 40 years Congress will win in Amroha Lok Sabha Seat in Uttar Pradesh details here

மேலும் கடந்த 2019 லோக்சபா தேர்தலில் உத்தர பிரதேசத்தில் 80 இடங்களில் 62 தொகுதிகளில் பாஜக தான் வெற்றி பெற்றது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 5 இடங்களிலும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 10 இடங்களிலும், பாஜகவின் கூட்டணி கட்சி ஏடிஎஸ் 2 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் தான் வெற்றி பெற்றது. காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி ரேபரேலியில் வென்ற நிலையில் ராகுல் காந்தி கூட அமேதியில் தோற்றார்.

இப்படி பாஜகவின் கோட்டையாக திகழும் உத்தர பிரதேசம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டியிருப்பது அந்த கட்சிக்கு இன்னும் பிளஸ் பாயிண்டாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் வரும் லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் வகையில் உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இதில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் களமிறங்க உள்ளது. சமாஜ்வாதி கட்சி 63 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் அமேதி, ரேபரேலி, பிரயாக்ராஜ், வாரணாசி, மகாராஜ்கஞ்ச், தியோரியா, பான்ஸ்கான், சீதாபூர், அம்ரோஹா, புலந்த்ஷாஹர், காசியாபாத், கான்பூர், ஜான்சி, பாரபங்கி, ஃபதேபூர் சிக்ரி, சஹாரன்பூர், மதுரா உள்பட 17 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில் தான் அம்ரோஹா தொகுதியில் 2ம் கட்டமாக வரும் 26ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் டேனிஷ் அலி போட்டியிடுகிறார்.

இவர் தான் தற்போது அம்ரோஹா தொகுதியின் சிட்டிங் எம்பியாக உள்ளார். கடந்த 2019 லோக்சபா தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் சார்பில் இவர் போட்டியிட்டார். சமீபத்தில் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் டேனிஷ் அலி காங்கிரஸில் இணைந்தார். தற்போது அவர் காங்கிரஸ் வேட்பாளராக அம்ரோஹா தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் முஜாகித் உசேன், பாஜக சார்பில் கன்வர் சிங் தன்வார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Is After 40 years Congress will win in Amroha Lok Sabha Seat in Uttar Pradesh details here

இதில் டேனிஷ் அலிக்கு அதிக வெற்றி வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அதாவது 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தொகுதி காங்கிரஸ் வசமாக சான்ஸ் உள்ளது. இந்த தொகுதியை கடந்த 1984ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் ராம் பால் சிங் வெற்றி பெற்றார். அதன்பிறகு 1989, 1991, 1996, 1998, 1999, 2004, 2009, 2014, 2019 என மொத்தம் 9 தேர்தல்கள் நடந்துள்ளன. இதில் 1989ல் ஜனதாதளம், 2004ல் சுயேச்சை, 2009ல் ராஷ்ட்ரிய லோக்தளம் வெற்றி பெற்றது. அதன்பிறகு மற்ற தேர்தல்களில் பாஜக, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

கடந்த 2014ல் பாஜகவின் கன்வார் சிங் தன்வார் வெற்றி பெற்ற நிலையில் 2019ல் அவரை வீழ்த்தி தான் பகுஜன் சமாஜ் வேட்பாளர் டேனிஷ் அலி வென்றார். தற்போ டேனிஷ் அலி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளதால் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ளது என சொல்லப்படுகிறது. ஏனெ்னறால் இப்போது காங்கிரஸ் + சமாஜ்வாதி கட்சிகள் கூட்டணியில் உள்ளன. அதோடு இஸ்லாமியரான டேனிஷ் அலி போட்டியிடுகிறார்.

இந்த தொகுதியில் ஓபிசி பிரிவினர் தான் அதிகம் வசிக்கின்றனர். சுமார் 60 சதவீதம் ஓபிசி பிரிவினர். அதற்கு அடுத்தப்படியாக தலித் மக்கள் 20 சதவீதம் பேரும், இஸ்லாமியர்கள் 20 சதவீதம் பேரும் உள்ளனர். ஓபிசி பிரிவினர் மத்தியில் சமாஜ்வாதி கட்சிக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதியான சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அறிவிப்பு இங்குள்ள ஓபிசி பிரிவினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அதோடு காங்கிரஸ் கட்சிக்கு இஸ்லாமியர்கள், தலித் மக்களிடம் ஓரளவு செல்வாக்கு உள்ளது. அதேபோல் டேனிஷ் அலிக்கும் இஸ்லாமியர்கள் மத்தியிலும், பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்ததால் தலித் மக்கள் மத்தியிலும் நிறைய ஆதரவாளர்கள் உள்ளன. இதனால் தான் வரும் லோக்சபா தேர்தலில் அம்ரோஹா தொகுதியை 40 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும் இந்த தொகுதியை பொறுத்தமட்டில் பாஜகவும் அதிக கவனம் செலுத்துகிறது. நேற்றைய தினம் பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது இஸ்லாமியர்கள் மற்றும் தலித் மக்களை காங்கிரஸ் வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கிறது. ஆனால் பாஜக அப்படியில்லை. முத்தலாக்கை ரத்து செய்தது. அதோடு தலித் மக்களுக்கும், ஓபிசி பிரிவினருக்கும் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம் என்று கூறினார். அதுமட்டுமின்றி, கடந்த 2019 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி இந்த தொகுதியில் தனித்து போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சச்சின் சவுத்ரி வெறும் 12,510 ஓட்டுகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தார்.

Is After 40 years Congress will win in Amroha Lok Sabha Seat in Uttar Pradesh details here

மாறாக பகுஜன் சமாஜ் + சமாஜ்வாதி கூட்டணியில் தான் டேனிஷ் அலி வெற்றி பெற்றார். டேனிஷ் அலி 6 லட்சத்து ஆயிரத்து 82 ஓட்டுகள் பெற்ற நிலையில் பாஜகவின் சிட்டிங் எம்பியாக இருந்த கன்வார் சிங் தன்வார் 5 லட்சத்து 37 ஆயிரத்து 83 ஆயிரம் ஓட்டுகள் பெற்று 63 ஆயிரத்து 248 ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் தோற்றார். இதுவும் கவனிக்கத்தக்க அம்சமாகும். ஏனென்றால் லோக்சபா தேர்தலை பொறுத்தமட்டில் 63 ஆயிரத்து 248 ஓட்டு வித்தியாசம் என்பது மிகவும் குறைவாகும்.

இது வரும் தேர்தலில் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். இருப்பினும் கூட காங்கிரஸ் கட்சி 40 ஆண்டுகளுக்கு பிறகு அம்ரோஹா தொகுதியை டேனிஷ் அலி மற்றும் சமாஜ்வாதி கூட்டணி உதவியால் வசப்படுத்தி விடுவோம் என கூறி வருகிறது. அதேவேளையில், பாஜகவும், பகுஜன் சமாஜ் கட்சியும் மீண்டும் அந்த தொகுதியை வசப்படுத்த தேவையான வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது.

அரசியல் கட்சிகள் இடையே போட்டி இப்படி இருந்தாலும் வேட்பாளரின் வெற்றி, தோல்வியை மக்கள் தான் நிர்ணயம் செய்வார்கள். அந்த வகையில் மக்களின் தீர்ப்பின்படி அம்ரோஹாரை 40 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் தட்டி தூக்குகிறதா? இல்லாவிட்டால் மீண்டும் தொகுதியை பாஜக அல்லது பகுஜன் சமாஜ் வேட்பாளரிடம் தாரை வார்க்கிறதா? என்பதை அறிய தேர்தல் முடிவு வெளியாகும் ஜுன் 4ம் தேதி வரை காத்திருப்போம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+