Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛பாஜகவை தனியாகவே எதிர்ப்பேன்’.. வாயைவிட்ட மம்தா பானர்ஜி! ‛இந்தியா’ கூட்டணிக்கு விரைவில் ‛குட்பை’?

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: பாஜகவை தனியாகவே எதிர்த்து போட்டியிடும் உறுதி தன்னிடம் உள்ளது. எதிரியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ‛இந்தியா’ கூட்டணியை கட்டுப்படுத்துவதை ஏற்க முடியாது. காங்கிரஸ் பிடிவாதத்தை சகித்து கொள்ள முடியாது என மம்தா பானர்ஜி பரபரப்பாக பேசியுள்ளார். இதனால் விரைவில் ‛இந்தியா’ கூட்டணியில் இருந்து மம்தா பானர்ஜி கட்சி வெளியேறுகிறதா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. 2014, 2019 தேர்தலைபோல் இந்த முறையும் வெற்றி பெறும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது. அதேவேளையில் எதிர்க்கட்சிகள் பாஜகவை வீழ்த்த வியூகம் வகுத்துள்ளன.

Is Mamata Banerjee may out from INDIA alliance? question raises after she says I have the power to fight against BJP


கட்சி பாகுபாடுகளை மறந்து பாஜகவை வீழ்த்துவதே இலக்கு என்ற ஒரே கொள்கையுடன் 28 கட்சிகள் ஒன்றிணைந்து ‛இந்தியா’ கூட்டணியை உருவாக்கி உள்ளன. காங்கிரஸ், திமுக, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம், லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி உள்பட 28 கட்சிகள் இணைந்துள்ளன.

இந்த கூட்டணி கட்சி தலைவர்கள் 4 முறை நேரடியாக ஆலோசனை நடத்தி உள்ளனர். தற்போது ஒவ்வொரு மாநிலங்களிலும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை என்பது தொடங்கி உள்ளது. இதற்கிடையே தான் ஒரு வாரத்துக்கு முன்பு கூட ‛இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் காணொலி மூலம் நடந்தது. இதில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ‛இந்தியா’ கூட்டணியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்தா.. வந்துட்டாங்கல்ல.. நான்-வெஜ் டெலிவரி கூடாது.. பாஜக ஆளும் மாநிலங்களில் சிக்கிய ஜொமாட்டோ

இந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை. முன்னதாக மல்லிகார்ஜுன கார்கேவை ‛இந்தியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த மம்தா பானர்ஜி பரிந்துரைத்தார். ஆனால் மல்லிகார்ஜுன கார்கே அதனை மறுத்துள்ள நிலையில் மம்தா பானர்ஜி பங்கேற்காத கூட்டத்தில் அவர் ‛இந்தியா’ கூட்டணி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே தான் தற்போது மம்தா பானர்ஜி கூறிய கருத்து என்பது அவர் விரைவில் ‛இந்தியா’ கூட்டணியை விட்டு வெளியேறுகிறாரா? என்ற பெரிய கேள்வியை எழுப்பி உள்ளது.

மேற்கு வங்கத்தை பொறுத்தமட்டில் மொத்தம் 42 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. தற்போது மம்தா பானர்ஜி கட்சி 22 தொகுதிகளிலும், பாஜக 18 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளிலும் வென்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு இடம் கூட இல்லை. இதற்கிடையே தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ‛இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மம்தா பானர்ஜி கட்சிகள் இடங்களை பங்கீட்டு கொள்ள வேண்டும். இதில் மம்தா பானர்ஜிக்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அதிக இடங்களை விட்டு கொடுக்க விரும்பவில்லை. ஆனால் இரு கட்சிகளும் அதிக இடங்களை கேட்பதாக கூறப்படுகிறது.

‛அல்லா மீது சத்தியம்’.. ராமர் கோவில் கும்பாபிஷேக நாளில் மம்தா பானர்ஜி கூறிய வார்த்தை! விளாசும் பாஜக

இதனால் தான் மம்தா பானர்ஜி கோபமாக இருக்கிறார். இந்நிலையில் தான் நேற்று மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் அனைத்து மத நல்லிணக்க பேரணியை தொடங்கினார். அப்போது அவர் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜி கூறியது தான் அவர் ‛இந்தியா’ கூட்டணியை விட்டு எஸ்கேப் ஆக உள்ளாரா? என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளது. இந்த கூட்டணியில் மம்தா பானர்ஜி பேசியதாவது:

‛இந்தியா’ கூட்டணியை பொறுத்தமட்டில் குறிப்பிட்ட மாநிலங்களை மாநில கட்சிகளிடம் விட்டு விட வேண்டும். காங்கிரஸ் கட்சி பிற மாநிலங்களில் 300 நாடாளுமன்ற தொகுதிகளில் கூட தனித்து போட்டியிடலாம். நான் அவர்களுக்கு உதவுவேன். மேலும் அவர்கள் அந்த இடங்களில் போட்டியிடும் தொகுதிகளில் நான் எனது வேட்பாளர்களை நிறுத்த மாட்டேன். ஆனால் அவர்கள் குறிப்பிட்ட விஷயத்தை கூறிக்கொண்டு பிடிவாதமாக இருக்கிறார்கள்.

பாஜகவை தனித்து எதிர்த்து போராட எனக்கு உறுதி உள்ளது. ஆனாலும் சீட் பங்கீட்டில் எங்களது வார்த்தையை சிலர் (காங்கிரஸ் தலைவர்கள்) கேட்க விரும்பவில்லை. உங்களால் பாஜகவை எதிர்த்து போராட முடியாவிட்டால் தொகுதியையும் கேட்காதீர்கள். எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‛இந்தியா’ என்ற பெயரை வைக்க பரிந்துரை செய்ததே நான் தான். ஆனால் நான் கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கும்போது இடதுசாரிகள் கட்டுப்பாடுகளை எடுத்து கட்டுக்குள் வைக்க பார்க்கின்றனர். இதை ஏற்கவே முடியாது. 34 ஆண்டுகளாக (மேற்கு வங்க அரசியல் கம்யூனிஸ்ட்டை எதிர்த்தது) நான் நான் யாரை எதிர்த்து போராடி வந்தேனோ அவர்களுடன் உடன்பட முடியாது. இருப்பினும் சில அவமானங்களை தாங்கி ‛இந்தியா’ கூட்டணி கூட்டத்தில் பங்கேற்றேன்.

மேலும் இன்றைய நாளில் எத்தனை அரசியல்வாதிகள் பாஜகவை நேரடியாக எதிர்க்கிறார்கள்? ஒருவர் (ராகுலை மறைமுகமாக குறிப்பிட்டு) சென்றால் மட்டுமே போதும் என நினைக்கிறார். ஆனால் உண்மை என்பது அதுவாக இல்லை. நான் கோவில், குருத்வாரா, சர்ச், மசூதிகளுக்கு சென்றேன். பாபர் மசூதியை இடிப்பு மற்றும் வன்முறையின்போது வீதியில் இறங்கி போராடினேன்’’ என்றார். இதன்மூலம் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை அவர் கடுமையாக தாக்கி உள்ளார்.

முன்னதாக ஏற்கனவே மம்தா பானர்ஜி தனது கட்சி தொடர்பான தலைவர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில், ‛‛இந்தியா கூட்டணியில் முக்கியத்துவம் தராவிட்டால் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 42 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம்’’ என தெரிவித்ததாக தகவல்கள் வெளியானது. இத்தகைய சூழலில் தற்போதைய மம்தா பானர்ஜியின் பேச்சு என்பது விரைவில் அவர் ‛இந்தியா’ கூட்டணிக்கு ‛குட்பை’ சொல்கிறாரா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+