For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"நம்பிக்கை நாயகனே"... ஐஎஸ்ஐஎஸ் தலைவருக்கு கடிதம் எழுதி சர்ச்சையில் சிக்கிய இந்திய முஸ்லீம் தலைவர்

Google Oneindia Tamil News

டெல்லி: லக்னோவில் உள்ள தாருல் உலூம் நத்வதுல் உலமா அமைப்பின் மெளலானா சல்மான் நத்வி, ஈராக்கின் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவருக்கு நம்பிக்கை நாயகனே என்று விளித்துக் கடிதம் எழுதியிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

பல்வேறு முஸ்லீம் மத குருக்களும் கூட இந்த கடிதத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஐஎஸ்ஐஎஸ் தலைவரான அபு பக்கருக்குத்தான் கடிதம் அனுப்பியுள்ளார் நத்வி.

ஆனால் அந்தக் கடிதம் அபு பக்கருக்கு அறிவுரை கூறி எழுதப்பட்ட கடிதம் என்று விளக்கியுள்ளார் நத்வி. இதுகுறித்து அவர் கூறுகையில், அப்பாவி மக்கள் உயிரிழப்பதைத் தடுக்குமாறும், தவிர்க்குமாறும்தான் நான் அபுபக்கருக்கு கோரிக்கை விடுத்து அதில் எழுதியுள்ளேன் என்றார்.

ஆனால் இதுகுறித்து ஒரு மதத் தலைவர் கருத்து தெரிவிக்கையில், இவரது அறிவுரையை எப்படி ஐஎஸ்ஐஎஸ் தலைவர் ஏற்பார் என்று நம்ப முடியும். மேலும் அவரை எப்படி அமீருல் மொமினீன் (நம்பிக்கைக்குரிய தலைவர்) என்று அழைக்க முடியும். அபு பக்கர் வெற்றிகரமானவர் என்று எந்த அடிப்படையி்ல முடிவு செய்தார் நத்வி என்று கேட்டுள்ளார்.

English summary
Maulana Salman Nadvi from the Darul-Uloom-Nadvatul-Ulema (Nadva College, Lucknow) wrote a letter to Iraq ISIS chief Abu Bakar and that has landed him in controversies. ISIS being a terrorist organization, even the Islamist gurus are pointing fingers at Nadvi's act. The latter has his own reasons though. According to Nadvi, the letter was a word of advise for the terror group chief so that he could curb the killing of innocent people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X