தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் கை கோர்ப்பு.. டெல்லியில் இஸ்ரேல் அதிபர் உறுதி
பயங்ரவாதம், தீவிரவாத செயல்களை ஒழிக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட இஸ்ரேல் உறுதி எடுத்துள்ளதாக அந்நாட்டு அதிபர் ரீயுவன் ரில்வின் தெரிவித்துள்ளார்.
டெல்லி: பயங்கரவாதம், தீவிரவாதச் செயல்களினால் இரு நாடுகளும் ஒரேமாதிரியான பாதிப்புகளை எதிர்கொண்டு வருவதால் அந்த கொடூர நடவடிக்கைகளுக்கு எதிராக இணைந்து செயல்படுவது என இஸ்ரேல் தீர்மானித்துள்ளது என்று அந்நாட்டு அதிபர் ரீயுவன் ரில்வின் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து, டெல்லியில் நிகழச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் கூறியதாவது: பயங்கரவாதம் தீவிரவாதத்துக்கு எதிராக போரிடுவதில் இரு நாடுகளும் ஒரே மாதிரியான சவால்களை எதிர் கொண்டுள்ளன. இதனால் உலக பயங்கரவாதத்துக்கு எதிராக போரிடுவது என இங்கு உறுதி அளிக்கின்றேன்.

இந்த நாட்டில் உள்ள திறன்களை செயல்பாட்டுக்கு கொண்டுவர இங்கு வந்துள்ளோம் என்றார் அதிபர் ரில்வின். பாதுகாப்பு துறையில் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பு அதிகரித்து வருவது குறித்தும் அவர் நினைவு கூர்ந்தார்.
கனணி குற்றம் குறித்து பேசிய ரில்வின், இது அறிவியல் வளர்ச்சியால் ஏற்பட்டுள்ள பிரச்னை என்றும், அது யுக்தியான சவால் என்றும் கூறினார். அனைத்து துறையிலும் உரிய ஒத்துழைப்பு அளித்து பாதுகாப்பான உலகை உருவாக்க இஸ்ரேல் துணை நிற்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாதுகாப்பான உலகை உருவாக்க இஸ்ரேலுடன் துணை நிற்கும் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.
உணவு பாதுகாப்பு குறித்துப் பேசிய ரில்வின், அடுத்த தலைமுறைக்காக விவசாயம், சுற்றுச் சூழல், உணவு, நீர்வளம் ஆகியவற்றுக்கு வித்திட்டு வருகின்ற நிபுணர்களின் பணிகள் பாராட்டத்தக்கது என்று கூறினார். இதற்கான வேலைகளில் இரு நாட்டு நிபுணர்களும் ஏற்கனவே ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் நிகழ்த்திய சிறப்புரையை நினைவுகூறும் விதமாக இந்திய சகோதர சகோதரிகளே என்ற வார்த்தையை குறிப்பிட்டு ரில்வின் பேசினார்.
பொருளாதாரம், தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இரு நாடுகளும் ஏற்கனவே உரிய ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகிறது என்றும், அந்த நடவடிக்கை இரு நாடுகளின் வளர்ச்சிக்காக தொடரும் என்றும் ரில்வின் தெரிவித்தார்.
இந்தியாவின் வளர்ச்சிக்காக 4 வண்ண புரட்சியை வடிவமைத்துள்ள பிரதமர் மோடியின் திட்டத்தில் இஸ்ரேல் முக்கிய பங்காற்ற விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்,
அதாவது மஞ்சள் கலர் சூரிய மின் சக்திக்கும், வெண்மை பால் உற்பத்திக்கும், பச்சை விவசாய மேம்பாட்டுக்கும், நீல நிறம் நீர்வள மேலாண்மைக்கும் என நான்கு வண்ண புரட்சித் திட்டத்தை பிரதமர் மோடி தீட்டியுள்ளார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications