7 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி-56.. மேஜர் விஷயத்தை புதிதாக சாதித்த இஸ்ரோ!

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீ ஹரிகோட்டா: பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் 7 செயற்கோள்களுடன், ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் ஏவப்பட்டது

நமது இந்திய வானிலை ஆய்வு மையம் தொடர்ச்சியாக பல்வேறு சாட்டிலைட்களை விண்ணில் ஏவி வருகிறது. குறைந்த செலவில் மிகவும் வெற்றிகரமாக விண்ணில் ஏவுவதால் பல உலக நாடுகள் இந்தியாவிடம் தங்கள் சாட்டிலைட்களை அனுப்புகிறார்கள்.

அதன்படி இன்றைய தினம் பிஎஸ்எல்வி பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட்டை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் அனுப்பியது. காலை சரியாக 6.30 மணிக்கு 7 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.. பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் 7 செயற்கோள்களுடன், ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் ஏவப்பட்டது.

 ISRO launched seven foreign satellites to space

இஸ்ரோ: இந்த பிஎஸ்எல்வி சி 56 ராக்கெட்டின் முக்கியமான பேலோட் என்பது DS-SAR செயற்கைக்கோள் ஆகும். இது இரு பரிமாண படங்களை முப்பரிமாண படங்களாக உருவாக்கும் திறன் கொண்டதாகும். சிங்கப்பூர் அரசும் எஸ்டி இன்ஜினியரிங் என்ற நிறுவனமும் இணைந்து இந்த சாட்டிலைட்டை உருவாக்கியுள்ளது. மொத்தம் 360 கிலோ எடை கொண்ட இந்த சாட்டிலைட் பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள சுற்றுப்பாதையில் (NEO) செலுத்தப்பட்டது.

இதில் வானிலை சார்ந்த தகவல்களை நம்மால் தெரிந்து கொள்ள முடியும். இரவும் பகலும் கவரேஜை செய்யும் திறனை இது கொண்டுள்ளது. வானில் இருந்தபடியே மிகத் துல்லியமான படங்களை எடுக்கும் திறனும் இதற்கு இருக்கிறது. இயற்கைப் பேரழிவுகளால் ஏற்படும் சேதங்கள், பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கை, காடுகள் அழிக்கப்படுவதைக் கண்காணிப்பது எனப் பல விஷயங்களுக்கு இது பயன்படும் என்று கூறப்பட்டுள்ளது.

சாட்டிலைட்கள்: இந்த DS- SAR சாட்டிலைடன் உடன் வேறு 6 சாட்டிலைட்களும் அனுப்பப்பட்டது. தொழில்நுட்ப செயல் விளக்க மைக்ரோசாட்லைட் VELOX-AM, வளிமண்டல இணைப்பு மற்றும் இயக்கவியல் ஆய்வுக்கான சோதனை செயற்கைக்கோள் ARCADE, நானோ செயற்கைக்கோள் SCOOB-II, நகர்ப்புற மற்றும் தொலைதூர இடங்களில் தடையற்ற இணையச் சேவையை வழங்கும் ஒரே நானோ சாட்டிலைட் என மொத்தமாக 7 சாட்டிலைட்களை இஸ்ரோ இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இவை low earth orbit எனப்படும் குறைந்த பூமி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

இங்கிருந்து கிளம்பி 23 நிமிடங்களுக்குப் பிறகு, 535 கி.மீ தூரத்தைக் கடந்த பிறகு, ராக்கெட்டில் இருந்து சாட்டிலைட்கள் பிரிந்து சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இப்படி மொத்தம் 7 செயற்கைக்கோள்கள் அனுப்பப்படுகின்றன.. இது பிஎஸ்எல்வி ராக்கெட்டின் 58ஆவது வெற்றிகரமான பயணமாகும்.

முயற்சி: பொதுவாக ஒரு முறை ராக்கெட் அனுப்பப்படும் போது ஒரு குறிப்பிட்ட சுற்று வட்டப் பாதையில் மட்டுமே சாட்டிலைட்களை நிலைநிறுத்தப்படும்.. ஆனால், இந்த முறை சோதனை முயற்சியாக இரண்டு வெவ்வேறு சுற்று வட்டப் பாதைகளில் சாட்டிலைட்களை இஸ்ரோ வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சில வாரங்களுக்கு முன்பு இஸ்ரோ சந்திரயான் 3 ராக்கெட்டை விண்ணில் அனுப்பியிருந்தது. அது இப்போது வரை சரியான பாதையிலேயே பயணித்து வருகிறது. வரும் ஆகஸ்ட் கடைசி வாரத்தில் அது நிலவைச் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது வரை நமது சந்திரயான் 3 விண்கலனை ஆய்வாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+