31 செயற்கைக்கோள்களுடன் நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி-சி40 ராக்கெட்.. கவுன்ட்டவுன் தொடக்கம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஸ்ரீஹரிகோட்டா: பிஎஸ்எல்வி ராக்கேட்டை விண்ணில் செலுத்துவதற்கான கவுன்ட் டவுன் இன்று காலை தொடங்கியது.

இஸ்ரோ அனுப்பும் பிஎஸ்எல்வி-சி40 ராக்கெட்டில் அமெரிக்கா, லண்டன், கனடா, தென்கொரியா, பின்லாந்த், பிரான்ஸ் உள்ளிட்ட 28 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் இடம்பெறுகின்றன.

இந்தியாவின் 710 கிலோ எடைகொண்ட கார்டோசாட்-2 செயற்கைக்கோள், 100 கிலோ எடைகொண்ட மைக்ரோ செயற்கைகோள், 5 கிலோ எடைகொண்ட நானோ செயற்கைகோள் ஆகிய மூன்று செயற்கைகோள்கள் என மொத்தம் 31 செயற்கைக்கோள்கள் அனுப்பப்படுகின்றன.

நாளை விண்ணில் பாய்கிறது

நாளை விண்ணில் பாய்கிறது

இதில் மைக்ரோ சேட்டிலைட் இந்தியாவின் 100வது செயற்கைகோள் ஆகும். இந்த பிஎஸ்எல்வி-சி40 ராக்கெட்டை இஸ்ரோ நாளை காலை 9.28 மணிக்கு விண்ணில் ஏவுகிறது.

31 செயற்கைக்கோள்கள்

31 செயற்கைக்கோள்கள்

31 செயற்கைக்கோள்களின் மொத்த எடை 1,323 கிலோவாகும். 2 மணிநேரம் 21 வினாடிகளில் செயற்கைகோள்கோள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவுன்ட்டவுன் தொடக்கம்

கவுன்ட்டவுன் தொடக்கம்

இதற்கான 28 மணி நேர கவுன்ட் டவுன் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் காலை 5.29 மணிக்கு தொடங்கியது. செயற்கைகோள்கள் நாளை விண்ணில் செலுருத்தப்படுவதை தொடர்ந்து விஞ்ஞானிகள் அதனை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

2018ஆம் ஆண்டில்..

2018ஆம் ஆண்டில்..

இது 2018 ஆம் ஆண்டில் இந்தியா விண்ணில் செலுத்தும் முதல் செயற்கைகோள் ஆகும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி விண்ணில் செலுத்திய பிஎஸ்எல்வி சி39 செயற்கைகோள் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
ISRO launches 31 satellites from Sriharikota tomorrow by PSLV-C40. The 28-hour countdown to launch 31 satellites, including three of India and 28 of six other countries, by Indian Space Research Organisation began at 5.29 am in Sriharikota in Andhra Pradesh today.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற