வரலாறு படைக்கும் இஸ்ரோ! பிரபஞ்சத்தின் ரகசியம் உடையும்? எக்ஸ்போசாட் செய்ய போகும் ஆய்வு என்ன? விவரம்

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீகரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டுடன் எக்ஸ்போசாட்' செயற்கை கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. பிரபஞ்சத்தின் ரகசியங்களை அவிழ்க்கும் முனைப்புடன் இந்த செயற்கை கோள் மூலமாக பல்வேறு ஆய்வுகளை இஸ்ரோ செய்ய உள்ளது.

விண்வெளித்துறையில் இந்தியா, வளர்ந்த நாடுகளுக்கு இணையாக சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. அமெரிக்கா கூட இதுவரை நிகழ்த்தாத சாதனையை இந்தியா கடந்த ஆண்டு தனது சந்திரயான் திட்டத்தின் மூலம் செய்து காட்டியது. சந்திரயான் விண்கலத்தின் மூலமாக நிலவின் தென் துருவத்தில் சாஃப்ட் லேண்டிங் செய்து ஒட்டுமொத்த உலகத்தையும் இந்தியா திரும்பி பார்க்க வைத்தது.

 Isro launches XPoSat All you need to know about satellite

விண்வெளித்துறையில் இந்தியாவின் செய்த சாதனைகளுக்கு மகுடம் சூட்டியது போல இந்த சாதனை அமைந்தது. அதைத்தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்.1 என்ற விண்கலத்தை இந்தியா விண்ணில் செலுத்தியுள்ளது. இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு அதேபாய்ச்சலுக்கு இஸ்ரோ தயராகிவிட்டது. அதை மெய்ப்பிக்கும் விதமாகவே ஆண்டின் முதல் நாளான இன்று , பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் மூலம் 'எக்ஸ்போசாட்' என்ர செயற்கை கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவி உள்ளது.

ரூ.250 கோடி செலவு: இந்த செயற்கை கோளின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும். புவி வட்டப்பாதையில் 500-700 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த செயற்கை கோள் நிலைநிறுத்தப்பட இருக்கிறது. இந்த செயற்கைகோள், எக்ஸ்ரே மூலங்களின் தற்காலிக நிலை, நிறமாலை மற்றும் துருவப்படுத்தல் அம்சங்கள் போன்ற அறிவியல் ஆய்வுகளையும் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

அத்துடன், விண்வெளியில் உள்ள தூசு, கருந்துளை வாயுக்களின் மேகக்கூட்டமான 'நெபுலா' உள்ளிட்டவற்றை ஆராய உள்ளது. இந்தியா தற்போது அனுப்பும் எக்ஸ்போசாட்' ( XPoSAT) இன் மதிப்பு ரூ 250 கோடி ஆகும். அமெரிக்காவின் நாசா கிட்டதட்ட இதே பணிக்காக IXPE என்ற செயற்கை கோளை அனுப்பி இருந்தது.

பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும்: அதற்கான செலவு $188 மில்லியன், அதாவது இந்திய மதிப்பில் 1500 கோடியாகும். ஆனால் இதைவிட பலமடங்கு குறைவு என்பது கவனத்தில் கொள்ள வேண்டியது. இந்த ராக்கெட்டுடன் திருவனந்தபுரம் மாணவிகள் வடிவமைத்த 'வெசாட்' என்ற செயற்கைகோளும், வெளிநாடுகளை சேர்ந்த மேலும் 10 செயற்கைகோள்கள் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்பட உள்ளது.

இந்த செயற்கை கோள் குறித்து பேராசிரியர் பிஸ்வஜித் பால் கூறும் போது, "காஸ்மிக் பொருட்களில் உள்ள காந்தப்புலங்கள் மற்றும் தீவிர ஈர்ப்புச் சூழலில் உள்ள பொருள் மற்றும் கதிர்வீச்சுக்கு இடையேயான விஷயங்கள் குறித்து ஆய்வு செய்தவே இந்த செயற்கை கோளின் நோக்கமாகும். இந்த திட்டம் விண்வெளி குறித்துப் பல கேள்விகளுக்கு விடை கொடுக்கும்" என்றார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+