நிலாவுக்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோ... சந்திராயன்-2 திட்டம் ரெடி!
நிலாவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை இந்தியாவின் இஸ்ரோ அமைப்பு கையில் எடுத்து இருக்கிறது.
டெல்லி: நிலாவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை இந்தியாவின் இஸ்ரோ அமைப்பு கையில் எடுத்து
இருக்கிறது. அதற்கு முன் நிலவில் நிறைய ஆராய்ச்சிகளை செய்ய இஸ்ரோ அமைப்பு திட்டமிட்டு இருக்கிறது.
இந்த ஆரய்ச்சிகளை மேற்கொள்வதற்காக இஸ்ரோ சந்திராயன்-2 திட்டத்தை அறிமுகபடுத்தி இருக்கிறது. இந்த திட்டத்தின் பணிகள் இன்னும் சில நாட்களில் தொடங்கும்.
மேலும் இது நிறைய எதிர்கால திட்டங்களை கருத்தில் கொண்டு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இது நிலவு ஆராய்ச்சியில் பெரிய மைல்கல்லாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இஸ்ரோவின் சந்திராயன்-1
நிலவு ஆராய்ச்சியில் இந்தியா இதுவரை நிகழ்த்திய பெரிய சாதனை என்றால் அது சந்திராயன்-1 என்று கூறலாம். நிலவின் வட்டப்பாதையில் சந்திராயன்-1 விண்கலத்தை சரியாக நிலை நிறுத்திய போது உலகமே இந்தியாவை திரும்பி பார்த்தது. மிகவும் குறைந்த செலவில், நிறைய அறிவியல் கணிப்புகளை வைத்து சந்திராயன்-1 செயல் திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்ட்டது.

சந்திராயன் சாதனை
இந்த நிலையில் சந்திராயன் நிலவில் நீர் வழி தடங்கள் தெரிவதாக கூறியது. இந்த கண்டுபிடிப்பு இதுவரை எந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களும் செய்யாதது. அதன்பின் சில நாட்களில் இந்தியாவின் கண்டுபிடிப்பு உண்மைதான் என்று நாசா அமைப்பும் கூறியது. ஆனால் சில நாட்களில் சந்திராயன்-1 தனது வட்டப்பாதையை இழந்தது. இதனால் சந்திராயன் அனுப்பிய தகவல்கள் நின்று போனது.

இஸ்ரோவின் சந்திராயன்-2
தற்போது நிலவுக்கு சந்திராயன்-2 விண்கலத்தை அனுப்ப திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதில் விண்கலம் மட்டும் இல்லாமல் சிறிய அளவில் ரோபோ போன்ற 'ரோவர்' ஒன்று அனுப்பப்பட இருக்கிறது. இந்த சந்திராயன்-2 ரோவர் நிலவின் மேற்பரப்பில் இறக்கப்பட்டு அங்கு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது. 2013 ஆம் ஆண்டு கடைசியாக நிலவுக்கு சீனா இது போன்ற ரோவர் ஒன்றை அனுப்பியது.

திட்டம் என்ன
தற்போது இந்த திட்டம் குறித்த முக்கியமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதன்படி நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு முன்னோட்டமாகவே இந்த ரோவர் அனுப்பும் திட்டத்தில் இஸ்ரோ களம் இறங்கி இருக்கிறது. தற்போது இந்த ரோவர் திட்டம் 2018 மார்ச் மாதத்தில் முடிவடைந்து அதே மாத இறுதியில் நிலவுக்கு அனுப்பப்படும். அது செய்யும் ஆராய்ச்சியை கொண்டு 2020ல் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications