பிரதமர் மோடி முன்னிலையில் விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி.-சி23 ராக்கெட்
{ventuno}சென்னை: இஸ்ரோ தயாரித்துள்ள பி.எஸ்.எல்.வி.- சி 23 என்ற ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 9.52 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இதை பிரதமர் நரேந்திர மோடி நேரில் பார்வையிட்டார்.
இஸ்ரோ பி.எஸ்.எல்.வி.-சி 23 என்ற ராக்கெட்டை தயாரித்தது. இந்த ராக்கெட் மூலம் பிரான்ஸ், ஜெர்மனி, கனடா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 5 செயற்கைக்கோள்கள் இன்று காலை 9.52 மணிக்கு ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் சதிஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.

இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை காண பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை வந்தார். அவர் அங்கிருந்து கார் மூலம் ஸ்ரீஹரிகோட்டா சென்றார்.
அங்குள்ள ஓய்வு விடுதியில் தங்கியிருக்கும் அவரை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார். பிரதமராக பதவியேற்றுக் கொண்ட பிறகு மோடி முதல் முறையாக ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை இன்று நேரில் கண்டார்.
விண்ணுக்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களில் பிரான்ஸ் செயற்கைக்கோளான ஸ்பாட்-7 714 கிலோ எடை கொண்டது. மேலும் ஜெர்மனி நாட்டு செயற்கைக்கோளான ஏஐசாட் 14 கிலோவும், கனடாவின் என்.எல்.எஸ்.1 மற்றும் 2 ஆகியவை தலா 15 கிலோவும், சிங்கப்பபூரின் வெலாக்ஸ்-1 7 கிலோவும் எடை கொண்டவை. முன்னதாக இந்தியா கடந்த 2012ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு செயற்கைக்கோளான 712 கிலோ எடை கொண்ட ஸ்பாட்-6 செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications