வரும் 10-ம் தேதி விண்ணில் பாய்கிறது மிக அதிகஎடை கொண்ட பி.எஸ்.எல்.வி.-சி28.. இறுதிகட்ட பணியில் இஸ்ரோ
பெங்களூரு: இதுவரை இல்லாத அளவில் மிக அதிக எடை கொண்ட PSLV-C28 ராக்கெட் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து வரும் 10-ந்தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ராக்கெட் 5 வெளிநாட்டு செயற்கைகோள்களை சுமந்து சென்று பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்துகிறது.

இஸ்ரோவின் வர்த்தக அமைப்பான "ஆன்ட்ரிக்ஸ்" இதுவரை இல்லாத வகையில் அதிக எடை கொண்ட வர்த்தக ரீதியில் ஏவப்படும் ராக்கெட்டாகும். இதன் மூலும் செலுத்தப்படும் 5 வெளிநாட்டு செயற்கைகோள்களும் மொத்தம் 1,440 கிலோ எடை கொண்டதாகும்.
13-வது விண்கலமாக ஏவப்படும் PSLV-C28 ராக்கெட் ஒரே மாதிரியான 3, DMC3 ஆப்டிக்கல் எர்த் அப்சர்வேஷன் சாட்டிலைட்டுகளை சுமந்து செல்கிறது. இந்த செயற்கைக்கோள்கள் இங்கிலாந்தின் எஸ்.எஸ்.டி.எல் நிறுவனம் தயாரித்தது ஆகும். 447 கிலோ கொண்ட இந்த 3 செயற்கைக்கோள்களும் சுமார் 647 கிலோ மீட்டர் தொலைவுள்ள சன் சின்க்ரோனஸ் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications