புத்தாண்டில் சாதிக்கும் இஸ்ரோ.. 'எக்ஸ்போசாட்' சேட்டிலைட்டுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி-58
ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டுக்கான கவுண்ட்டவுன் நேற்று தொடங்கிய நிலையில், இன்று காலை எக்ஸ்போசாட்' உள்ளிட்ட செயற்கைக்கோள்களுடன் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ விண்வெளித்துறையில் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. சந்திரயான் திட்டங்கள் மூலமாக உலகையே திரும்பி பார்க்க வைத்தது இஸ்ரோ. விண்வெளித்துறையில் அமெரிக்கா, சீனா, ரஷ்யாவிற்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையும் இந்தியாவுக்கே சாரும். இந்த பெருமையை இஸ்ரோ நிகழ்த்தி காட்டியது.

இப்படி கடந்த ஆண்டு முழுவதும் விண்வெளித்துறையில் சாதனைகளை படைத்த இந்தியா, 2024 ஆம் ஆண்டிலும் சாதனையை தொடர உள்ளது. அந்த வகையில், ஆண்டின் முதல் நாளான இன்று இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சிக்காக ராக்கெட்டை விண்ணில் ஏவியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து, பிஎஸ்எல்வி. சி-58 ராக்கெட் இன்று காலை 9.10 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இதற்கான கவுண்டவுன் நேற்று தொடங்கியது. இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள எக்ஸ்போசாட்' என்ற செயற்கைக்கோள் பூமியில் இருந்து 650 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது. இந்த ராக்கெட்டில் உள்ள செயற்கை கோள் விண்வெளியில் உள்ள நிறமாலை, தூசு, நெபுலா' உள்ளிட்டவற்றை ஆராய உள்ளது.
இந்த செய்ற்கை கோளுடன், காலநிலைபற்றி ஆய்வு செய்வதற்காக, திருவனந்தபுரத்தில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மாணவிகள் தயாரித்த வெசாட்' என்ற செயற்கைகோளும் விண்ணில் ஏவப்படுகிறது. இது மட்டும் இன்றி ராக்கெட்டில் வெளிநாடுகளை சேர்ந்த மேலும் 10 செயற்கைக்கோள்கள் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்படுகிறது.
ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை நேரில் காண 10 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருந்தனர். அவர்கள் அனைவரும் ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்து சென்றதை உற்சாகத்துடன் கண்டுகளித்தனர். புத்தாண்டு தினத்தில் இஸ்ரோ நிகழ்த்த இருக்கும் இந்த சாதனையை நாட்டு மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications