வாரிசு அரசியலை பாஜக எதிர்க்குதா! அப்போ இது என்ன? ஹரியானா பாஜக வேட்பாளர் லிஸ்ட்டை பாருங்க
சண்டிகர்: ஹரியானா சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஆட்சியில் இருக்கும் பாஜக, வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், வாரிசுகள் பலருக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்தி மொழி, கலாச்சார காவலர்கள், மாட்டிறைச்சி என பல சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றதுதான் ஹரியானா. சமீபத்தில் சண்டிகர் மேயர் தேர்தல் மற்றும் மாட்டிறைச்சி கடத்தல் விவகாரங்களில் ஹரியானாவின் பெயர் பலமாக அடிபட்டிருந்தது. இப்படி இருக்கையில் விரைவில் இந்த மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.

இம்மாநிலத்தில் மொத்தம் 90 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இந்த தொகுதிகளை அனைத்திற்கும், அக்டோபர் 1ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4ம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் வெளியாகின்றன.
இந்நிலையில், பாஜக தனது முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது. இந்த லிஸ்ட்டில் 67 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பிடித்துள்ளன. ஆனால், இதில் பலர் வாரிசு வேட்பாளர்களாக உள்ளனர். அதாவது ஹரியானா பாஜக தலைவர்களின் வாரிசுகளுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.
லிஸ்டின்படி பார்த்தால்.. அடம்பூர் சட்டமன்றத் தொகுதியில், குல்தீப் பிஷ்னோயின் மகன் பவ்யா பிஷ்னோய் வேட்பாளராக களமிறக்கப்பட்டிருக்கிறார். குல்தீப் பிஷ்னோய் கடந்த 2014 மற்றும் 2019 என இரண்டு சட்டமன்ற தேர்தல்களில் பாஜக சார்பில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்தவராவார்.
அதேபோல, முன்னாள் அமைச்சர் கர்தார் சிங் பதானாவின் மகன், மன்மோகன் பதானாவுக்கு சமல்காவிலிருந்து சீட்டு வழங்கப்பட்டுள்ளது. மத்திய இணையமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங்கின் மகள், ஆர்த்தி ராவுக்கு அட்டேலி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.
காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த கிரண் சவுத்ரி, சமீபத்தில் அக்கட்சியால் ராஜ்யசபாவுக்கு அனுப்பப்பட்டார். தற்போது அவரது மகள் ஸ்ருதி சவுத்ரி, தோஷம் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். சார்க்கி தாத்ரி தொகுதியில், முன்னாள் அமைச்சர் சத்பால் சங்வானின் மகன், சுனில் சங்வானை பாஜக தனது வேட்பாளராக நிறுத்தியுள்ளது.
இப்படியாக திரும்பும் பக்கமெல்லாம், பாஜக வாரிசுகளுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறது. இதற்கு பாஜக தரப்பில் சில காரணங்களும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அதாவது ஹரியானா கள நிலவரத்தை பார்த்தால், பாஜகவுக்கு கொஞ்சம் சறுக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. மட்டுமல்லாது நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் 5 இடங்களில்தான் பாஜக வென்றது. எனவே சட்டமன்ற தேர்தல் விஷயத்தில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்றும், அதனால்தான் வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
-
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
கோவை வடக்கு தொகுதியில் பாஜக கதை குளோஸ்.. சத்தமே இல்லாமல் வேலை பார்க்கும் வேலுமணி ஆதரவாளர் -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் 1 தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்! -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
அடித்து தூக்கும் மம்தா.. அதிர்ச்சியில் பாஜக! மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் தான்! புதிய சர்வே -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி












Click it and Unblock the Notifications