காவிரி பற்றி பிரதமரிடம் தனியாக பேசவது சரியில்லை.. டெல்லி சென்ற முதல்வர் பழனிச்சாமி பேட்டி
காவிரி வழக்கு குறித்து பிரதமரிடம் தனியாக பேசுவது சரியாக இருக்காது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்துள்ளார்.
டெல்லி: காவிரி வழக்கு குறித்து பிரதமரிடம் தனியாக பேசுவது சரியாக இருக்காது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பல போராட்டங்களுக்கு பிறகும் மத்திய அரசு மறுத்து வருகிறது.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டோம், ஆனால் காவிரிக்கு திட்டம் ஒன்றை உருவாக்குவோம் என்றும் கூறியது. இதற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்த பின்பும் கூட இரண்டு வாரம் கூடுதல் அவகாசம் கேட்டு இருக்கிறது.

இதுகுறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக முதல்வர் பழனிச்சாமி நேற்று டெல்லி சென்று இருந்தார். காவிரி வழக்கு பற்றி அவர் பிரதமரிடம் பேசுவார் என்று கருத்தப்பட்டது. ஆனால் அவர் காவிரி குறித்து எதுவும் விவாதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
டெல்லியில் மாநில முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட பின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் காவிரி விவகாரம் குறித்து தான் பிரதமரிடம் எதுவும் பேசவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும் ''காவிரி பற்றி பிரதமரிடம் தனியாக பேசுவது சரியாக இருக்காது. தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனு முன்பே பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் தமிழகத்தின் எல்லா கோரிக்கைகளும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.'' என்றுள்ளார்.
மேலும் ''அந்த மனுவில் காவிரி குறித்தும் முழு விளக்கம் முன்பே அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் அனைத்துக்கட்சி தலைவர்களையும் பிரதமர் அழைத்து பேசுவார் என நம்பிக்கை உள்ளது. ஆகவே இப்போது காவிரி குறித்து பிரதமரிடம் தனியாக பேசுவது சரியாக இருக்காது'' என்று முதல்வர் பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications