Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உக்கிரமடைந்த போராட்டம்.. போலீஸ் தாக்குதலில் மேலும் ஒரு விவசாயி பலி? டெல்லி எல்லையில் பதற்றம்!

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் டெல்லி நோக்கி அணிவகுத்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் போராட்டத்தை தடுக்க காவல்துறையினர் ரப்பர் குண்டுகளை பயன்படுத்திய நிலையில் குண்டு தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பில் இருந்து வருகிறது. மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் எவ்வளவோ போராட்டங்களை நடத்தியிருந்தாலும், அதையெல்லாம் இந்த அரசு பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை. இவர்களின் கோரிக்கைகளை செவி கொடுத்து கேட்கவும் இல்லை. ஆனால், கடந்த 2020ம் ஆண்டு விவசாயிகள் நடத்திய போராட்டம், மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டை மாற்றியது.

It is reported that a young farmer was killed when the police attacked to stop the farmers rally towards Delhi

அதே அளவுக்கு வீரியமிக்க போராட்டத்தை தற்போது விவசாயிகள் மீண்டும் கையில் எடுத்துள்ளனர். தாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று கோரி டெல்லி நோக்கி பேரணியை அவர்கள் தொடங்கியுள்ளனர்.

விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய வேண்டும், விவசாயிகளின் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்ய வேண்டும். சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும், 2021 லக்கிம்பூர் கெரி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும், நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2013ஐ மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், மற்றும் 2020-21ல் முந்தைய போராட்டத்தின் போது இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை தடுக்க மத்திய அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், இது தோல்வியில் முடிந்ததாக அறிவித்த விவசாய சங்கத்தினர் டெல்லியை முற்றுகையிடுவதில் உறுதியாக இருக்கின்றனர். மறுபுறம் காவல்துறையினர் தரப்பில், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து டெல்லியை இணைக்கும் முக்கிய சாலைகளில் பல கட்ட தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். சிமெண்ட் தடுப்புகள், முள் வேலிகள், சாலையில் ஆணிகளை பதித்தல், கண்டெய்னர் கொண்ட சாலையை அடைத்தல் என பல கட்ட தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், பஞ்சாப், ஹரியானா எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 24 வயதான இளம் விவசாயி சுப் கரன் சிங் காவல்துறையின் தாக்குதலால் உயிரிழந்ததாக விவசாய சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன. ரப்பர் குண்டு தாக்கியதில் படுகாயமடைந்த அவரை, சக விவசாயிகள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்துவிட்டதாகவும் விவசாய சங்கத்தினர் கூறுகின்றனர்.

ஆனால் ஹரியானா காவல்துறை இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறது. இதற்கிடையே விவசாயிகளுடன் 5ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+