லாரி ஏற்றி கொல்ல பார்த்தார்கள்.. கஷ்டப்பட்டு பிழைத்தேன்.. விஎச்பி தலைவர் பிரவிண் தொகாடியா பரபரப்பு
தன்னை சிலர் கொலை செய்ய முயற்சி செய்துள்ளதாக விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவிண் தொகாடியா பரபரப்பு குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.
சூரத்: தன்னை சிலர் கொலை செய்ய முயற்சி செய்துள்ளதாக விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவிண் தொகாடியா பரபரப்பு குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.
குஜராத்தின் காமரேஜ் என்ற இடத்தில் அவர் சென்ற கார் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இதையடுத்து அவர் இந்த புகாரை வைத்து இருக்கிறார்.
இவர் ஏற்கனவே பலமுறை இப்படி புகார்கள் அளித்து இருக்கிறார். தன்னுனடய உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று பலமுறை இவர் சொல்லி இருக்கிறார்.

இசட் பிளஸ் பாதுகாப்பு
இவரது தொடர்ச்சியான புகார்கள் காரணமாக இவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. எல்லா மாநிலத்திற்கும் செல்லும் போது, அம்மாநில அரசு இவருக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்கும். ஆனால் இவர் புகார் கொடுப்பதை மட்டும் நிறுத்தவில்லை.

கார் விபத்து
இந்த நிலையில் இவர் சென்ற கார் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. குஜராத்திற்கு அவர் சென்று கொண்டு இருந்த போது இந்த விபத்து நிகழ்ந்து இருக்கிறது. இதில் யாருக்கும் எந்த விதமான உயிர் சேதமும் நடக்கவில்லை என்று கூறியுள்ளனர்.

புல்லட் தாங்கும் கார்
அவர் சென்ற கார் புல்லட் தாங்கும் கார் ஆகும். இதனால் காரில் சிறிய அளவில் மட்டுமே சேதங்கள் ஏற்பட்டு இருக்கிறது. காரிலில் மோதிய லாரி கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த சம்பவம் நடந்து இருப்பதாக விசாரணையில் தெரிய வந்து இருக்கிறது.

கொலை முயற்சி
இது அப்பட்டமான கொலை முயற்சி என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இசட் பிளஸ் பாதுகாப்பு இருந்து தனக்கு முன்பு பாதுகாப்பாக கார் எதுவும் செல்லவில்லை என்று அவர் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார். இதனை பயன்படுத்தி தன்னை கொலை செய்ய முயற்சி செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications