இந்து ஒற்றுமையை அதிகரிக்க ‘ஐயப்பா யோகம்’ சேவை அமைப்பு: சபரிமலை ஐயப்பா சேவா சமாஜம் முடிவு
சபரிமலை: தமிழகம் முழுவதும் ஐயப்பா யோகம் என்ற சேவை அமைப்பை துவங்கி இந்து ஒற்றுமையை அதிகப்படுத்த உள்ளதாக சபரிமலை ஐயப்பா சேவா சமாஜம் தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிறன்று திருவாரூரில் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியளித்த அந்த அமைப்பின் செயலாளர் டி.வி.லெட்சுமி நாராயணன் கூறியதாவது :-
ஐயப்ப பக்தர்களுக்கு சேவை செய்யத் திட்டமிட்டு, இந்துக்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் 2008-ல் சுகுமாறன் நம்பியாரால் 2008 -ம் ஆண்டு தொடங்கப்பட்டது சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம். தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கர்நாடகத்தில் சமாஜத்தின் கிளைகள் உள்ளன.
கேரளம் தவிர பிற மாநிலங்களில் வடக்கு, தெற்கு என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு கிளைகள் தொடங்கப்பட்டுள்ளன. கிளைகள் மூலம் மக்களுக்கு ஊராட்சிகள்தோறும் அன்னதானம், மருத்துவச் சிகிச்சை உள்ளிட்ட சேவைகள் செய்துகொடுக்க முடிவெடுக்கப்பட்டு, பல ஊராட்சிகளில் சேவைப் பணி தொடர்கிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில், ஐயப்ப சேவா சமாஜம் மூலம் மாத பூஜையில், மாதந்தோறும் 7 நாள்கள் அன்னதானம் வழங்கப்படுகிறது. மருத்துவ வசதி மற்றும் விபத்துகள், உயிரிழப்புகள் ஏற்படும் பட்சத்தில் உதவி செய்யப்படுகிறது' என்றார்.
கூட்டத்தில் ஐயப்ப சேவா சமாஜத்தின் மாநில துணைத் தலைவர்கள் நடராஜபிரபு, அத்ரிசுவாமி, துரைசாமி, பொருளாளர் நாகராஜ், மாநில நிர்வாகச் செயலர் எம்.எஸ். மணியன் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications