Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் இருந்து யாழ். சென்ற விமானம் தரை இறங்கியது- தண்ணீர் பீய்ச்சி உற்சாக வரவேற்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இருந்து இலங்கை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு சென்ற விமானம் தரை இறங்கியது.

இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு பகுதியை சென்றடைய வேண்டுமானால் கொழும்பு சென்று அங்கிருந்து சாலை மற்றும் ரயில் மார்க்கமாகத்தான் செல்ல முடியும். யாழ்ப்பாணத்தில் இருந்த பலாலி விமான தளம் ராணுவ பயன்பாட்டில் மட்டும் இருந்தது. 1983-ம் ஆண்டு வரை பயணிகள் விமானங்கள் இங்கு தரை இறங்கின.

Jaffna International Airport to be open on today

யுத்தம் முடிந்த பின்னர் தற்போது இந்திய உதவியுடன் இது சர்வதேச பயணிகள் விமான நிலையமாக விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. இந்த விமான நிலையத்தில் இருந்து திருச்சி, சென்னை உள்ளிட்ட தென்னிந்திய நகரங்களுக்கும் டெல்லி உள்ளிட்ட வட இந்திய நகரங்களுக்கும் விமான சேவைகள் இயக்கப்பட உள்ளன.

இதன் முதல் கட்டமாக நேற்று முன்தினம் சென்னையில் இருந்து அல்லையன்ஸ் ஏர் விமானம் சோதனை ஓட்டமாக யாழ்ப்பாணம் விமான நிலையம் வந்திறங்கியது. இதையடுத்து இன்று காலை சென்னையில் இருந்து அல்லையன்ஸ் ஏர் முதலாவது விமானம் பலாலிக்குப் புறப்பட்டது.

இந்த விமானம் சற்று முன்னர் யாழ்ப்பாணத்தில் தரை இறங்கியது. அப்போது தண்ணீர் பீய்ச்சி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 36 ஆண்டுகளுக்குப் பின்னர் பலாலி விமான நிலையம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே உள்ளிட்டோர் இந்த விமான நிலையத்தை திறந்து வைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+