குண்டு கட்டாக தூக்கி ஜெகனை ஆம்புலன்சில் ஏற்றிய போலீஸ்! மருத்துவமனையில் அனுமதி
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்து வரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கி மருத்துவமனையில் சேர்த்தனர்.
தெலுங்கானா பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தியும் ஜெகன் மோகன் ரெட்டி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த 5ம் தேதி தொடங்கினார்.

5வது நாளை எட்டியுள்ள உண்ணாவிரதத்தால் ஜெகன் மோகனின் உடல் நிலை மோசமடைந்தது. சர்க்கரையின் அளவு குறைந்து வருவதால் கோமா நிலைக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்தனர். ஆனாலும், ஜெகன்மோகன் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்துவிட்டார்.

இதைத் தொடர்ந்து, நள்ளிரவில் ஜெகன்மோகன் ரெட்டியை காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கி ஆம்புலன்சில் ஏற்றினர். அப்போது, அவரது கட்சியினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஆனாலும், ஜெகன்மோகன் ரெட்டியை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதனிடையே, ஜெகன்மோகன் ரெட்டியை கைது செய்யவில்லை என்றும் டாக்டர்களின் அறிவுறுத்தலின் பேரில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications