
அது என்ன ஜெய் ஸ்ரீராம்.. சீதையை அவமதிக்காங்க.. பட்டென கூறி கொந்தளித்த ராகுல்..விழிக்கும் பாஜக! ஏன்?
இந்தூர்: ‛ஜெய்ஸ்ரீராம்' எனக்கூறி பாஜக கட்சியும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் சீதையை அவமதிக்கிறாங்க. அந்த கட்சியில் இருக்கும் ஒரு பெண் கூட சீதையை மதிப்பது இல்லை என மத்திய பிரதேச பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தி கொந்தளித்து பேசினார். இதனால் பாஜக விழிக்கிறது.
ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7 ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து பாரத் ஜோடோ யாத்திரை துவங்கினார். இந்த யாத்திரை 12 மாநிலம், 2 யூனியன் பிரதேசம் வழியாக 150 நாட்கள் வரை நடைபெற உள்ளது.
தற்போது இந்த யாத்திரை தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிராவை கடந்து மத்திய பிரதேசத்தை அடைந்துள்ளது. மத்திய பிரதேசத்துக்கு அடுத்தாண்டு தேர்தல் நடைபெற உள்ளது.
ஜெய்ஸ்ரீராம் சொல்ல சொல்லி.. 9 முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர்.. டெல்லி போலீஸ் குற்றப்பத்திரிக்கை

மத்திய பிரதேச யாத்திரை
இதனால் ராகுல் காந்தியின் இந்த பாரத் ஜோடோ யாத்திரை காங்கிரஸ் கட்சிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதனால் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர்கள் திக் விஜய் சிங், கமல்நாத் உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். தினமும் ஏராளமான தொண்டர்கள் ராகுல் காந்தியை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் அக்கட்சி தலைவர்களும், தொண்டர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.

பாஜக மீது விமர்சனம்
இந்நிலையில் ராகுல் காந்தி மத்திய பிரதேசத்தில் பாரத் ஜோடோ யாத்திரை செல்கிறார். அங்கு நடந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் இந்து கடவுள் ராமனின் உணர்வில் பாஜக செயல்படுவது இல்லை. பாஜக சீதைக்கு உரிய மரியாதை கொடுப்பது இல்லை என தெரிவித்தார். இதுதொடர்பாக ராகுல் காந்தி பேசியதாவது:

ராமனை மதிக்காத பாஜக
பாஜக தலைவர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் ஏன் ‛ஜெய் சியா ராம்' என கூறுவது இல்லை?. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர்கள் ராமனின் உணர்வோடு வாழ்வது இல்லை. ராமன் யாருக்கு அநீதி இழைக்கவில்லை. ராமன் அனைத்து சமுதாயத்தினரையும் ஒருங்கிணைத்தார். அனைவரையும் மதித்தார். விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் உதவினார். ஆர்எஸ்எஸ், பாஜக தலைவர்கள் அவரது வாழ்க்கை முறையை பின்பற்றுவது இல்லை.

பெண் கூட உச்சரிக்கவில்லை
பாஜக கட்சி, ஆர்எஸ்எஸ் அமைப்பில் உள்ள ஒரு பெண் கூட ‛ஜெய் சியா ராம்' என உச்சரிப்பது இல்லை. அந்த அமைப்புக்குள் சீதை வருவது இல்லை. சீதையை நீக்கிவிட்டனர். இதனை மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு பண்டித் என்னிடம் கூறினார். எனவே எனது ஆர்எஸ்எஸ் நண்பர்களிடம் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். 'ஜெய் ஸ்ரீ ராம்' போன்று 'ஜெய் சியா ராம்' ஹே ராம் என மூன்றையும் பயன்படுத்த வேண்டும். சீதையை அவமானப்படுத்த வேண்டாம்'' என கூறினார்.