ஜல்லிக்கட்டுக்கு எதிராக கோர்ட்டுக்கு சென்றது ஏன்? - விலங்குகள் நல வாரியத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்
டெல்லி: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கக் கோரி கோர்ட்டுக்கு சென்றது ஏன் என்று விளக்கம் அளிக்குமாறு கூறி மத்திய விலங்குகள் நல வாரியத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்து இருந்தது. பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்த கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு அனுமதி வழங்கியது. இது தொடர்பான அறிவிக்கையை மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டது.

இதனை எதிர்த்து இந்திய விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனையடுத்து மத்திய அரசின் அறிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு விலங்குகள் நல வாரியத்துக்கு மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அதில், "மத்திய அரசின் அறிக்கைக்கு எதிராக விலங்குகள் நல வாரியம் பல்வேறு கோர்ட்டுகளில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளது. இது போன்ற நடவடிக்கையை நிறுத்திக்கொள்ளுமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது அறிவுரை வழங்கும் அமைப்பு மட்டுமே. கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதற்கு முன்பு வனத்துறை அமைச்சகத்தின் அனுமதியை கோர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையை எதிர்த்து வாரியம் சுப்ரீம்கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் இன்றி எந்த வழக்கையும் தாக்கல் செய்வதற்கு விலங்குகள் நல வாரியத்துக்கு எந்த முகாந்திரமும் கிடையாது. எனவே வாரியத்துக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? என்று 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்" என்று கேட்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுப்போம் என்று கூறி உப்புச் சப்பில்லாத அறிவிக்கையை விட்டு மத்திய அரசு முன்பு ஜல்லிக்கட்டு ஆர்வலர்களை ஏமாற்றியது. இதனால் வரும் தேர்தலில் தென் மாவட்டங்களில் பாஜகவுக்கு ஓட்டு கிடைக்குமா என்ற சந்தேகம் உள்ளது. இந்த நிலையில்தான் திடீரென விலங்குகள் நல வாரியம் மீது மத்திய அரசு பாய்ந்துள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications