திட்டமிட்ட தேதியில் ஜல்லிக்கட்டு.. உச்சநீதிமன்றத்தின் இவ்விரு உத்தரவுகள்தான் காரணம்!
டெல்லி: ஜல்லிக்கட்டு தொடர்பாக பிறப்பித்த அறிவிக்கையை வாபஸ் பெற மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துவிட்டது. இதனால் குறிப்பிட்ட தேதியில், அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடப்பதற்கு தடைகள் வர வாய்ப்பில்லை.
ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய அரசு 2016ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி கொண்டு வந்த அறிவிக்கை ரத்து செய்யப்பட்டது. இது உச்சநீதிமன்றத்துக்கும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதை வழக்கின் எதிர்தரப்பாளர்களான பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நடவடிக்கையை ஏற்க கூடாது என்று அவை கோரின.

இன்று விசாரணை
இந்நிலையில், ஜல்லிக்கட்டு விவகாரத்திற்கு ஆதரவாக மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனு தாக்கல் செய்தது. அதேபோல தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் சிலர் சுப்ரீம் கோர்ட்டை அணுகி, ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்ய மனு தாக்கல் செய்தனர்.
இந்த அனைத்து மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற்றது. இரு நபர் நீதிபதி அமர்வில் விசாரணை நடைபெற்றது.

தடைக்கு மறுப்பு
அப்போது தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு இடைக்கால தடை கோரிய கியூப்பா அமைப்பின் கோரிக்கையை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது. அதேபோல, மத்திய அரசு தனது அறிவிக்கையை ரத்து செய்ததற்கும் தடை விதிக்க மறுத்துவிட்டது. எனவே அறிவிக்கையை எதிர்த்து நடந்த வழக்கு முடிவுக்கு வந்துவிட்டது. இதனால் இரு பெரும் தடைகளில் இருந்து ஜல்லிக்கட்டு தப்பித்துள்ளது.

ஆறு வாரங்களில் பதில்
தமிழக அரசு ஜல்லிக்கட்டு சட்டம் ஏன் இயற்றப்பட்டது என்பது குறித்து, இன்னும் 6 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே இன்னும் 6 வாரங்களுக்கு நடுவில் ஜல்லிக்கட்டு தொடர்பான தடை ஆணை எதுவும் நீதிமன்றத்தில் இருந்து வெளியாக வாய்ப்பே இல்லை என்பது உறுதியாகிவிட்டது. எனவே ஜல்லிக்கட்டு திட்டமிட்ட நாட்களில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் போன்ற பகுதிகளில் நடைபெறும் என்பது உறுதியாகிவிட்டது.

நல்லவேளை
ஒருவேளை மத்திய அரசின் அறிவிக்கை ரத்து நடவடிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றிராவிட்டால் அது சட்ட போராட்டத்தில் தமிழகத்திற்கு பின்னடைவாக அமைந்திருக்கும் என்பது இதில் கவனிக்கத்தக்கது. இப்போது சட்டப்போராட்டத்தில், தமிழகத்தின் கைக்கு பலம் கிடைத்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications