ஜமாத்-உத்-தவ்வா அமைப்புக்கு தடை விதித்து கண்ணாமூச்சி காண்பிக்கும் பாகிஸ்தான்!
டெல்லி: ஜமாத் உத் தவ்வா தீவிரவாத அமைப்பை தடை செய்துவிட்டதாக பாகி்ஸதான் கூறினாலும், தீவிரவாதிகள் ஹாயாக தங்கள் வேலையை பார்த்துக் கொண்டுதான் உள்ளது வெட்டவெளிச்சமாகியுல்ளது.
ஜமாத் உத் தவ்வா தீவிரவாத அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும், தீவிரவாதி, ஹபீஸ் சையதை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாகிஸ்தான் காதில் போட்டுக்கொள்ளாமல் இருந்தது. இந்நிலையில், திடீரென அந்த அமைப்பை தடை செய்து பாகிஸ்தான் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஒபாமாவுக்காக கண்துடைப்பு
ஒபாமா இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய உல்ள நிலையில், இதுபோன்ற அறிவிப்பை பாகிஸ்தான் வெளியிட்டிருக்கலாம் என்பது சர்வதேச பார்வையாளர்கள் கருத்தாக உள்ளது.

இதே வேலை
இதற்கு முன்பும் பாகிஸ்தான் ஜமாத் உத்தவ்வாவை தடை செய்வதும், அந்த அமைப்பு வேறுவழிகளில் தடையை உடைத்து வெளிவருவதும் நடந்துள்ளது. பாகிஸ்தான் நீதிமன்றங்கள், தடை நீக்கத்திற்கு பெரிதும் உதவிகரமாக இருந்துவந்துள்ளன.

தலைவரை ஏன் கண்டுகொள்ளவில்லை
எந்த ஒரு அமைப்பை தடை செய்தாலும், அதன் தலைவர் சிறகை வெட்டிவிடுவது உலக நாடுகள் வழக்கம். ஆனால் பாகிஸ்தானில் மட்டும் அமைப்பை தடை செய்தாலும் அதன் தலைவரான ஹபீஸ் சையதுக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது. நேற்றுமுன்தினம் கூட ஹபீஸ் கராச்சியில் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னை ஒரு சமூக சேவகர் போல காண்பித்துக் கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

பாகிஸ்தானின் அடியாள்
2008ல் மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய உடனேயே, சர்வதேச நெருக்கடிகளுக்கு பணிந்து, ஜமாத் உத் தவ்வா அமைப்பை பாகிஸ்தான் தடை செய்தது. ஆனால் சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி கோர்ட் மூலமாக தடையை தகர்த்தார் ஹபீஸ் சையது. பாகிஸ்தானும் அதற்கேற்ற ஓட்டைகளையே சட்டத்தில் போட்டுக் கொடுக்கிறது. ஏனெனில் இந்தியாவுக்கு எதிரான தாக்குதல்களுக்கு ஹபீஸ் சையது உதவி பாகிஸ்தானுக்கு தேவைப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications