ஜம்மு காஷ்மீர் தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது! 58.85% வாக்குகள் பதிவு!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது. 24 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மலை 5 மணி வரை நடைபெற்றிருக்கிறது. இரவு 7.30 மணி நிலவரப்படி 58.85% வாக்குகள் பதிவாகியுள்ளன. முதல் கட்ட தேர்தலில் 24 தொகுதிகளில் மொத்தம் 219 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் சுமார் 23 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்த போது 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய பாஜக அரசு ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலமும் 2 ஆக பிரிக்கப்பட்டது.

2 ஆக பிரிப்பு: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் 5 ஆண்டுகால பதவிக் காலம் கொண்ட சட்டசபையுடனும் லடாக் யூனியன் பிரதேசம் சட்டசபையே இல்லாததாகவும் இருக்கும் எனவும் இரண்டாகப் பிரிக்கப்பட்டன. 2019-க்கு முன்னர் வரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சட்டசபை பதவிக் காலம் 6 ஆண்டுகளாக இருந்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் தற்போது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சட்டசபை தேர்தலை இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்துகிறது.
3 கட்ட சட்டசபை தேர்தல்: ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இன்று 24 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. 26 தொகுதிகளில் செப்டம்பர் 25 மற்றும் 40 தொகுதிகளில் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 2-வது மற்றும் 3-வது கட்ட தேர்தல் நடைபெறும். அனைத்து வாக்குகளும் அக்டோபர் 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
களத்தில் கட்சிகள்: ஜம்மு காஷ்மீர் தேர்தல் களத்தில் பாஜக, காங்கிரஸ்-தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி, மக்கள் ஜனநாயகக் கட்சி, பொறியாளர் ரஷீத் எம்பியின் அவாமி இதிஹா கட்சி- ஜமாத் இ இஸ்லாமி கூட்டணி, ஆம் ஆத்மி உள்ளிட்டவை களத்தில் உள்ளன.
10 ஆண்டுகளுக்குப் பின் தேர்தல்: ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போதுதான் தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் நடைபெற்று வரும் 24 தொகுதிகளில் காஷ்மீர் பிராந்தியத்தில் 16 தொகுதிகளிலும் ஜம்முவில் 8 தொகுதிகளும் இடம் பெற்றுள்ளன.
219 வேட்பாளர்கள்: முதல் கட்ட தேர்தலில் மொத்தம் 219 பேர் வேட்பாளர்கள். இவர்களில் 90 பேர் சுயேட்சை வேட்பாளர்கள். முதல் கட்ட தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்கள் 23,27,580. இவர்களில் ஆண் வாக்காளர்கள் 11,76,462 , பெண் வாக்காளர்கள் 11,51,058. 24 தொகுதிகளிலும் 3,276 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 14,000 பேர் முதல் கட்ட தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்..
விஐபி வேட்பாளர்கள்: முதல் கட்ட தேர்தலில் சிபிஎம் கட்சியின் யூசுப் தரிகாமி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் குலாம் அகமது மீர், தேசிய மாநாட்டுக் கட்சியின் ஷகினா இடூ, மக்கள் ஜனநாயகக் கட்சியின் சர்தாஜ் மட்னி, அப்துல் ரெஹ்மான் வீரி, மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தியின் மகள் இல்திஜா முப்தி ஆகியோர் விஐபி வேட்பாளர்கள்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications