களையிழந்த பக்ரீத் பண்டிகை.. காஷ்மீரில் பதற்றம்.. எல்லையில் இனிப்பு பரிமாற்றம் இல்லை
Recommended Video
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பதற்றம் நீடித்து வருவதால் பக்ரீத் பண்டிகை களையிழந்து காணப்பட்டது. இந்தியா பாகிஸ்தானுக்கிடையே சுமூக உறவு இல்லாததால் எல்லையில் இரு நாட்டு வீரர்களும் இனிப்புகளை பரிமாறிக் கொள்ளவில்லை.
காஷ்மீரில் கடந்த சில நாட்களாக ராணுவ குவிப்பு, 144 தடையுத்தரவு, இணையதளம், செல்போன் சேவை முடக்கம் என தொடர் பதற்றம் நிலவி வந்தது. இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது.

மேலும் ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. இதனால் பாகிஸ்தான் கடும் கோபத்தில் உள்ளது. எனவே எந்த நேரத்திலும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என தகவல் வந்ததை அடுத்து இந்திய படைகள் உஷார் நிலையில் உள்ளன.
இந்த நிலையில் பக்ரீத் பண்டிகையையொட்டி காலை 8 மணி முதல் 9 மணி வரை 144 தடை விலக்கப்பட்டது. இந்த நேரத்தில் பண்டிகையை கொண்டாடி முடிப்பதற்குள் 144 தடை மீண்டும் விதிக்கப்பட்டது. இதனால் பெரிய மசூதிகள் மூடப்பட்டுவிட்டதால் மக்கள் தொழுகை நடத்த இயலவில்லை.
யாரும் கூட வேண்டாம் என போலீஸாரும் அறிவிப்புகளை வெளியிட்டனர். இந்த நிலையில் குடும்பத்தினருடன் பக்ரீத் கொண்டாட வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த சிலர் தொழுகை நடத்த முடியாமல் ஏமாற்றமடைந்தனர். கும்பல் கூடி கல்வீச்சு சம்பவங்கள், கலவரம் ஆகியவற்றை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மசூதிகளின் வாயிலில் ஏராளமான ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
காஷ்மீரில் உள்ள தெருக்கள் பாலைவனம் போல் ஆள் அரவமின்றி காட்சியளித்தது. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சுமூக உறவு இல்லாததால் வழக்கமாக இதுபோன்ற பண்டிகை நாட்களில் இனிப்பு பரிமாறி கொள்ளும் பழக்கம் நடைபெறவில்லை.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications