ஜம்மு காஷ்மீரில் இப்படி எல்லாம் நடக்குதே.. விடிஞ்சா தேர்தல்..இரவோடு இரவாக கட்சி தாவிய வேட்பாளர்!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நாளை மறுநாள் முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் பிரிவினைவாதி பொறியாளர் ரஷீத் எம்பியின் அவாமி இதிஹாத் கட்சி வேட்பாளர் முகம்மது இக்பால் ஷோபி திடீரென தேசிய மாநாட்டுக் கட்சியில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். பொறியாளர் ரஷீத் எம்பியின் அவாமி இதிஹாக் கட்சியும் தடை செய்யப்பட்ட ஜமாத் இ இஸ்லாமியின் மாஜி தீவிரவாதிகளும் கூட்டணி அமைத்துள்ளதற்கு எதிராக தாம் இந்த முடிவை எடுத்ததாக வேட்பாளர் முகம்மது இக்பால் ஷோபி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் முதல் கட்டமாக 24 தொகுதிகளில் நாளை மறுநாள் செப்டம்பர் 18-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்த முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது.

ஜம்மு காஷ்மீரில் நாளை மறுநாள் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் தொகுதிகளில் ஒன்று புல்வாமா. இத்தொகுதியில் தேசிய மாநாட்டுக் கட்சி வேட்பாளராக முகம்மது கலீல் பந்த், மக்கள் ஜனநாயகக் கட்சியின் வஹீத் உர் ரெஹ்மான் பாரா, பொறியாளர் ரஷீத் எம்பியின் அவாமி இதிஹாக் கட்சியின் முகம்மது இக்பால் ஷோபி உள்ளிட்டோர் களம் காண்கின்றனர்.
புல்வாமாவில் நாளை மறுநாள் தேர்தல் நடைபெறும் நிலையில் இன்று இரவு திடீரென தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லாவை அவாமி இதிஹாக் கட்சி வேட்பாளர் முகம்மது இக்பால் ஷோபி நேரில் சந்தித்து தம்மை தேசிய மாநாட்டுக் கட்சியில் இணைத்துக் கொண்டார். இது தொடர்பாக முகம்மது இக்பால் ஷோபி கூறியதாவது: அவாமி இதிஹாக் கட்சி வேட்பாளராக புல்வாமாவில் போட்டியிட்டேன். ஆனால் திடீரென தமாஜ் இ இஸ்லாமி அமைப்புடன் எங்கள் கட்சி கூட்டணி அமைத்துவிட்டது. செப்டம்பர் 18-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் திடீரென இந்த கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ளது. எங்களைப் பொறுத்தவரை தேசிய மாநாட்டுக் கட்சிதான் பிரம்மாண்ட வெற்றியைப் பெற உள்ளது. தற்போதைய நிலையில் வேட்பு மனுவை திரும்பப் பெற முடியாது. ஆகையால் வாக்காளர்கள் அனைவரும் தேசிய மாநாட்டு கட்சி- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களையே ஆதரிக்க வேண்டும். இவ்வாறு முகம்மது இக்பால் ஷோபி கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications